லிங்கா’ குழு சரியாக கவனிக்குமாஸ?செய்தித் துளிகள்

30 Aug,2014
 

             


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டு வழக்கம் போல மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான கமெண்ட்டுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே ஒரே விதமான இரண்டு சர்ச்சைகளால் ‘லிங்கா’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட விஷயங்களை அக்குழு தொடர்ந்து கவனித்து சரி செய்ய வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

‘லிங்கா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற போது, அங்குள்ள அஞ்சப்பூர் என்ற ஊரில் ஏரியில் கெமிக்கல்களை கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

அதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கநமக்கி அணையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது பிளாஸ்டிக், உட்பட பலக் கழிவுகளை அணைப் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றதாக படப்பிடிப்புக் குழு மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து இரண்டு இடங்களில் ஒரே விதமான சுற்றுச்சூழலைக் கெடுக்கும் விதத்தில் படப்பிடிப்புக் குழுவினர் நடந்து கொண்டது அப்பகுதி மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.

‘லிங்கா’ படத்தின் கதையே மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் போது அந்தப் படத்தின் குழுவினரே மக்களைப் பிரச்சனைக்குள்ளாக்குவது சரியா என ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனியாவது அவர்கள் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவார்களா என்ற சந்தேகமும் அவர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு படப்பிடிப்புக் குழு என்ன பதில் சொல்லப் போகிறது.


ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

Soundarya Rajinikanth Latest Photosஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரி ஜோதி தேஷ்பாண்டே “சவுந்தர்யாவை எங்கள் நிறுவனத்துக்கு வரவேற்கிறோம். அவரது திறமையும் உழைப்பும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். ஈராஸ் டிடிஎச், ஐபிடிவி, பிராண்பேண்ட் போன்றவற்றில் களம் இறங்குகிறது. அவற்றை திறம்பட சவுந்தர்யா வழிநடத்துவார்” என்கிறார்.

“ஈராஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் ஈராஸை மேம்படுத்ததுவேன். தொழில்நுட்பம், டிஜிட்டல் வாய்ப்புகளை ரசிகர்களின் தேவை அறிந்து பயன்படுத்துவேன். ஈராஸ் தயாரிப்பில் வரிசையாக படங்கள் வெளிவர இருக்கிறது. அவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு உரிய பங்கு இருக்கும்” என்கிறார் சவுந்தர்யா



சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!


ஹீரோவாக நடித்து ஆட்டமிழந்த வடிவேலு, கருணாஸ் வரிசையில் இப்போது சந்தானமும் சேர்ந்து விட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தனது மார்க்கெட்டை எக்கச்சக்கமாக உயர்த்தப்போகிறது என்று ஹீரோ வேஷம் போட்ட சந்தானத்தை அப்படம் சறுக்கி விட்டது.

அதனால் அதையடுத்து அவருக்காக கதை பண்ணி வைத்திருந்த டைரக்டர்களும் சரி, அவரை வைத்து படம் தயாரிக்கயிருந்த படஅதிபர்களும் சரி பின்வாங்கி விட்டனர்.

இதனால் ஹீரோ சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காமெடி வேடங்களை விரட்டி விட்டுக்கொண்டிருந்த சந்தானம்,. தன்னை ஹீரோவாக வைத்து யாரும் படம் பண்ண முன்வரவில்லை என்றதும் பலத்த அதிர்ச்சியடைந்தார்.

ஆனபோதும், ரஜினியின் லிங்கா, உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா, சேதுவின் வாலிப ராஜா உள்பட சில படங்கள் கைவசம் இருந்ததால், இந்த படங்களில நடிக்கும்போதே புதிய படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்று சில நெருக்கமான சினிமாக்காரர்களை அணுகி சான்ஸ் கேட்டார்.

ஆனால், யாரும் அதை காதில் வாங்கிககொள்ளவிலலை. இதனால் காலக்கொடுமையை நினைத்து சந்தானம் புலம்பிக்கொண்டிருந்த வேளையில், இப்போது நண்பேன்டா படத்தையடுத்து தான் நடிக்கும் படத்திலும் சந்தானத்துக்கு சான்ஸ் தருவதாக ஏற்கனவே கூறியிருந்த உதயநிதி ஸ்டாலினும் அடுத்த படத்தில் காமெடியனை மாற்றப்போவதாக கூறி விட்டாராம்.

இதுதான் சந்தானத்துக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். காரணம், உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல் படங்களை அடுத்து இப்போது நடித்து வரும நண்பேன்டா படங்கள் வரை உதயநிதிக்கு இணையான வேடத்தில் சந்தானமும் நடித்திருக்கிறார். அந்த வகையில், ஆரம்பத்தில் உதயநிதியை தாங்கிப்பிடித்தவரே சந்தானம்தான்.

இருப்பினும், இப்போது சந்தானத்தின் மார்க்கெட் இறங்குமுகத்தில் இருக்கும்போது எதற்காக ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் இருககிறாராம் சந்தானம்.

பாலா என்னை பட்டை தீட்டினார்! – வேதிகா பளிச் பேட்டி


நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை வெறும் பொம்மைகள்தான். இயக்குனர்கள்தான் எங்களை பட்டை தீட்டி பளபளப்பாக்குகிறார்கள். அந்த வகையில், டைரக்டர் பாலா என்னை பட்டை தீட்டி பளிச்சிட வைத்து விட்டார் என்கிறார் வேதிகா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டிஸ

* பரதேசி படத்துக்குப்பிறகு வந்த சில படங்களை தவிர்த்ததாக கூறப்படுகிறதே?

பாலா இயக்கத்தில் பரதேசி நடித்தபிறகு எனது திறமைக்கு தீனி போடும் கதைகளாக தேடினேன். காரணம், அதற்கு முன்பு வரை ஏதோ வந்தோம் போனோம் என்றுதான் நான் நடித்திருக்கிறேன். ஆனால் பாலா படத்தில் நடித்தபோது எனக்கு அவர் கொடுத்த பயிற்சி இப்போது வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தைரியத்தையும் எனக்கு ஏற்படுத்தி விட்டுள்ளது.

அதனால்தான், சில படங்களை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், காவியத்தலைவனில் மிக அற்புதமான வேடம். வேதிகாவுக்கு இவ்வளவு நன்றாக நடிக்கவும் தெரியுமா? என்று ரசிகர்கள் சொல்லப்போகிற படமாக அமைந்திருக்கிறது. அதேபோல், மலையாளத்திலும் சிங்காரவேலன், கெளசின்ஸ் என்ற இரண்டு படங்கள் கிடைத்தது. இந்த படங்களால் மலையாள சினிமாவில் எனக்கு நிலயான இடம் கிடைக்கும்.

* லாரன்சின் முனி படத்தில் நடிதத நீங்கள் அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க முயற்சி எடுக்காதது ஏன்?

நான் முயற்சி எடுக்காமல் இல்லை. அவர் காஞ்சனா, கங்கா படங்களை தொடங்கியபோதே சான்ஸ் கேட்டேன். ஆனால், அவர் கதைக்கு பொருத்தமாக இருந்தால் அழைப்பேன் என்று சொன்னார். அதன்பிறகு அழைக்கவில்லை.

மற்றபடி சினிமாவைப்பொறுத்தவரை சான்ஸ் கேட்டதும் உடனே தந்து விட மாட்டார்கள். அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தால் நம்மை விடவும் மாட்டார்கள். ஆக, வாய்ப்பு கிடைப்பதெல்லாம் கதையும், கதாபாத்திரங்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

* பெரும்பாலும் ஹீரோயிசம் இல்லாத படங்களாக நடிப்பதேன்?

ஆரம்பத்தில் அர்ஜூன், சிம்பு என்று முன்னணி ஹீரோக்களுடன்தான் நடித்தேன். அதன்பிறகும் படிப்படியாக வளர வேண்டும் என்று எடுத்த முயற்சிகள் எதுவும பலன் கொடுக்கவில்லை. அதனால் ஹீரோயிசம் கொண்ட படங்களுக்காக மெனக்கெடவில்லை. கிடைப்பதில் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதேசமயம், பரதேசி படத்தில் டைரக்டர் பாலா படத்தில் நடித்தது பெரிய விசயம்தான்.

அந்த படத்தைப்பார்த்து விட்டுத்தான் இப்போது சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படவாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடி என்றபோதும், நாடக நடிகையாகவும் நடித்திருக்கிறேன்.

அந்த காலத்து நாடக நடிகர்-நடிகைகளின் வாழ்க்கையை சொல்லும் படம் என்பதால், என் கேரியரில் இதுவும் பரதேசியைப்போலவே மிக முக்கியமான படமாக இருக்கும். இப்படியொரு படத்தில் நடித்தேன் என்று நான் காலத்துக்கும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். அதற்காக டைரக்டர் வசந்தபாலனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

* கிளாமர் போட்டியிலிருந்து நீங்கள் விலகியிருப்பது ஏன்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கதை என்ன கேட்கிறதோ அதற்கேற்ப நடிக்க நான் தயாராக இருக்கிறேன். தமிழில்தான் என்னை கிளாமராக யாரும் யூஸ் பண்ணவில்லை.

ஆனால், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறேன். சிவகாசி படத்தின் தெலுங்கு ரீமேக்கான விஜயதசமி படத்தில் படுகவர்ச்சியாக நடித்தேன். அதனால் ஆந்திராவில் எனக்கென்று ஒரு ரசிகர் வட்டமே உருவானது.

* அவசியப்பட்டால் சமந்தா போன்று பிகினிக்கு மாறுவார்களா?

அதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. அந்த அளவுக்கு நடிப்பதற்கு சரியான உடல்கட்டு வேண்டும். இல்லையேல் அசிங்கமாக தெரியும். அது மட்டுமின்றி, ஆபாசமாக காட்டாமல் அழகியலோடு படம் பிடிக்கிற நல்ல கேமராமேன் அவசியம் வேண்டும். சமந்தாவுக்கு அஞ்சான் படத்தில் சந்தோஷ்சிவன் என்கிற கேமராமேன் கிடைத்தார்.

அவர்தான் சமந்தாவை அவ்வளவு அழகாக காண்பித்தார். அதனால், நல்ல கதைக்களம், கேமராமேன் எல்லாம் பொருந்தி வந்தால் அதுமாதிரி நடிக்கலாம். தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்தால் ஆபாசமாகி விடும். இமேஜூம் கெட்டு விடும்.

* காவியத்தலைவனில் நடித்தபோது அனைகாவுக்கு உங்களுக்கும் ஈகோ சண்டை நடந்ததாமே?

அதெல்லாம் வெறும் வதந்தி. சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடித்தால் அதுமாதிரி பிரச்னை வருகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை அதெற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை. டைரக்டர் எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடிப்பேன்.

அதோடு, உடன் நடிக்கிற நடிகைகளுடனும் நட்பு வளர்ப்பேன். அந்த வகையில், முதன்முதலாக தமிழில் நடித்த அனைகா, தமிழ் சினிமாவைப்பற்றி நிறைய விசயங்களை என்னிடம்தான் கேட்டு தெரிந்து கொண்டார். அதனால் எங்களுக்கிடையே நல்ல நட்புதான் ஏற்பட்டது. இப்போதும் நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம்.

* ஸ்ருதிஹாசன், தமன்னா போன்று குத்துப்பாட்டுக்கு நடனமாடுவீர்களா?

குத்துப்பாட்டு எனக்கு எந்த அளவுக்கு செட்டாகும் என்று தெரியவில்லை. ஆனால், டூ-பீஸ் கலாச்சாரம் இல்லாமல் ஆட வேண்டுமென்றால் நான் தயங்கமாட்டேன். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் நயன்தாரா, தமன்னா, ஸ்ருதிஹாசன், காஜல்அகர்வால், அஞ்சலி என அனைவருமே தேவையென்றால் படுகவர்ச்சியாகவும் நடனமாடத்தான் செய்கிறார்கள். அதனால் சந்தர்ப்பம் வரும்போது நானும் குத்தாட்டமாடி காலத்திற்கேற்ப நடிகையாக உருவெடுப்பேன்.

* தென்னிந்திய ரசிகர்கள் குண்டு நடிகைகளைத்தானே அதிகமா ரசிக்கிறார்கள்? நீங்கள் உடல் எடையை அதிகரித்தால் என்ன?

எனது அப்பா அம்மா இருவருமே நல்ல குண்டானவர்கள். அதனால் நானும் படிக்கிற காலத்தில் குண்டாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வந்த பிறகுதான் வாயை கட்டி வயித்த கட்டி எடையை குறைத்து வைத்திருக்கிறேன்.

இப்போதுகூட நான் ஆசைப்பட்டதை சாப்பிட முடியவில்லை. அப்படி சாப்பிட்டால் என் உடம்பு பெருத்து விடும் அதன்பிறகு ஏறிய உடம்பை இறக்குவது என்பது மிக மிக கடினமான வேலை. அதனால்தான், உடம்பை அப்படியே பராமரித்து வைத்திருக்கிறேன் என்கிறார் வேதிகா.



நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!


நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவரின் வீடு சென்னை, திருவான்மியூரில் உள்ளது. தற்போது அஜீத், கெளதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சீக்கிரத்தில் வெடிக்க இருப்பதாகவும் கூறி வைத்துவிட்டார்.

இதனையடுத்து போலீஸார் நடிகர் அஜீத் வீட்டிற்கு சென்று வீடு முழுக்க வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கடைசியில் அது வெறும் வதந்தி என்றும் தெரியவந்தது. அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்திப் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட ஸ்ருதிக்கு முக்கால் கோடி சம்பளம்


அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம்.

தற்போது மத்யமா என்ற இந்திப் படத்தில் அர்ஜுன் கபூருடன் ஆடுவதற்கு 75 லட்சம் ரூபாயை சம்பளமாக சிங்கிள் பேமெண்டில் வாங்கியிருக்கிறார். பாடலுக்காக 15 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடலுக்கு இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்திருக்கும் ஒரே நடிகை ஸ்ருதிதான் என்கிறார்கள். இந்தப் பாடலை மூன்று கோடி ரூபாய் செலவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. தமிழில் ஆடவும் ஸ்ருதி தயாராக இருக்கிறார் கேட்கும் சம்பளம் 5 நாள் கால்ஷீட்டுக்கு 60 லட்சம். சிங்கிள் பேமெண்ட் என்கிறார்கள்.

நாடி ஜோதிடம் பார்க்க விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வேன். ஹன்சிகா



நான் பெரிய நடிகையாக வருவேன் என்று சிறுவயதிலேயே ஜோதிடர் ஒருவர் கூறினார். அவர் சொன்னது அப்படியே பலித்துவிட்டது என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

நடிகை ஹன்சிகா சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், என்னுடைய சிறு வயதில் பெற்றோர்களுடன் சென்று நான் ஜோதிடம் பார்த்தேன். எனக்கு ஜோதிடம் பார்த்த பிரபல ஜோதிடர் எனக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறுவேன் என்றும் பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு பிரபல ஜோதிடர் கூறினார். அவர் சொன்னது மிகச்சரியாக பலித்து விட்டது. அவருடைய ஆசியால் தற்போது பிரபல நடிகையாகி விட்டேன்.

மேலும் நாடி ஜோதிடம் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அதில் மிகச்சரியாக கணித்து கூறுவதாக அறிந்தேன். எனவே எனக்கும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதற்காக சிறந்த நாடி ஜோதிடர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று விசாரிக்க எனது உதவியாளர்களிடம் கூறியிருக்கிறேன். மதுரை அருகேயுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நாடி ஜோதிடம் பார்ப்பதில் திறமையானவர்கள் இருப்பதாக எனக்கு தகவல் வந்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies