சலீம். திரைவிமர்சனம்.-பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா பேட்டி. செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

29 Aug,2014
 

             



நான் படத்தின் வெற்றியடைந்த்து உற்சாகத்தோடு அதே த்ரில்லிங், சஸ்பென்ஸ் என்ற களத்தில் இறங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இசையமைக்கும் போது படங்களை கவனமாக தேர்வு செய்து வெற்றி பெறும் விஜய் ஆண்டனி, அதேபோல் நடிகராக மாறிய பின்னும் தனக்குரிய கதையை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி மகாத்மா காந்தியின் கொள்கையின் படி நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து வருகிறார். அவருக்கும் நாயகி அக்ஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. விஜய் ஆண்டனியுடன் நெருங்கி பழகும் அக்ஷா, விஜய் ஆண்டனி ரொம்ப நல்லவராக இருப்பதால் அவர் தனக்கு ஒத்து வரமாட்டார் என முடிவு செய்து திருமணம் செய்ய மறுக்கிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி வேலை செய்யும் மருத்துவமனை நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கு அவர் உடன்பட மறுப்பதால் வேலையையும் இழக்கிறார். ஒரே நாளில் வேலையையும் இழந்து, திருமணம் செய்ய இருக்கும் பெண்ணையும் தான் இழந்து நிற்பதற்கு காரணம் தனது நேர்மைதான் என்பதை புரிந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரே ஒருநாள் மட்டும் தனது நேர்மையான பாதையில் இருந்து விலகி அநீதியான் பாதைக்கு மாறுகிறார். அதன்பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் த்ரில்லிங் காட்சிகளுடன் படத்தில் இடம்பெற்றுள்ளன.

அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினால் விஜய் ஆண்டனி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். முதலில் அப்பாவித்தனமாக கேரக்டரில் அறிமுகமாகி பின்னர் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அதிர வைக்கிறது. இதேபோல தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்தால் விரைவில் விஜய் ஆண்டனி முன்னணி ஹீரோக்கள் வரிசையில் வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.

நாயகி அக்ஷா பர்தாசானிக்கு அறிமுகப்படம் போன்றே தெரியவில்லை. அவருடைய கண்களே பல இடங்களில் பேசுகிறது. முதல்பாதியில் இவருக்கு அதிக வேலையில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் நன்றாக நடித்துள்ளார். தமிழ் சினிமா வழக்கப்படி பாடல் காட்சிகளில் தாராளம் காட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், மற்றும் அமைச்சர் கேரக்டரில் வரும் செழியன் ஆகியோர்களின் நடிப்பும் அருமை.

ஒரு த்ரில்லிங் படத்திற்கு தேவையான பின்னணி இசையை மிகக்கச்சிதமாக அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. பாடல்களிலும் துள்ளல் அதிகம். மஸ்காரா பாடல் கண்டிப்பாக இன்னும் சில நாட்கள் தமிழகமெங்கும் பேசப்படும் என்பது உண்மை.

முதல்பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதையை அமைத்துள்ள இயக்குனர் நிர்மல்குமார், இரண்டாவது பாதியில் ஜெட் வேகத்தில் கொடுத்துள்ளார். நறுக்கான வசனங்கள் படத்திற்கு ப்ளஸ்.  சலீம், மொத்தத்தில் சலிப்பை தரவில்லை


செளந்தர்யா ரஜினியின் 2வது படத்தையும் தயாரிக்கிறது ஈராஸ் நிறுவனம்.


100 வருட இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான கோச்சடையான் படத்தை எடுத்து சாதனை புரிந்த ரஜினிகாந்த் அவர்களின் இளையமகள் செளந்தர்யா தனது அடுத்த பட அறிவிப்பை தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட செளந்தர்யா, தனது இரண்டாவது படம் குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையை இன்று ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது படத்திற்குரிய திரைக்கதை தயார் நிலையில் இருக்கிறது என்றும் தயாரிப்பாளர் கிடைத்ததும் படப்பிடிப்பு வேலையை ஆரம்பிக்க இருந்ததாகவும், இந்நிலையில் தனது முதல் பட தயாரிப்பாளரான ஈராஸ் நிறுவனமே தனது இரண்டாவது படத்தையும் தயாரிக்க முன்வந்து பேச்சுவார்த்தையை இன்று நடத்தியுள்ளது என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

செளந்தர்யாவின் அடுத்த படம் மோஷன் கேப்ட்சர் திரைப்படமா? அல்லது கோச்சடையானின் இரண்டாவது திரைப்படமா? என்று ரசிகர்களின் டுவிட்டர் கேள்விகளுக்கு செளந்தர்யா இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க கமல் கூறிய அட்வைஸ். ஸ்ருதிஹாசன்



உடலை கட்டுக்கோப்பாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துக்கொள்ள எனது தந்தை கூறிய அறிவுரையை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்று பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில் இன்று தெரிவித்துள்ளார்.

உடல்நலத்திற்கு தீங்கு இளைக்காததும், உடம்பை ஸ்லிமாக வைத்துக்கொள்ள உதவி செய்வது சைவ உணவு வகைகள் மட்டுமே என்று தனது தந்தை கமல்ஹாசன் தனக்கு சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்துள்ளதாகவும், அவருடைய அறிவுரையை முடிந்தவரை தான் கடைபிடித்து வருவதால்தான் தன்னால் ஸ்லிம் உடம்பை மெயிண்டன் செய்ய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு மிகவும் பிடித்த பட்டர் பிரான், மற்றும் calamari  என்ற கடல் உணவை மட்டும் தன்னால் கைவிட முடியவில்லை என்று கூறும் ஸ்ருதி, தன்னுடைய நட்பு வட்டாரங்களில் உள்ளவர்கள் அனைவரும் சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது விஷாலுடன் 'பூஜை' படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இந்தியில் மட்டும் அவர் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க கமல் கூறிய அட்வைஸ். ஸ்ருதிஹாசன்



உடலை கட்டுக்கோப்பாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துக்கொள்ள எனது தந்தை கூறிய அறிவுரையை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்று பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில் இன்று தெரிவித்துள்ளார்.

உடல்நலத்திற்கு தீங்கு இளைக்காததும், உடம்பை ஸ்லிமாக வைத்துக்கொள்ள உதவி செய்வது சைவ உணவு வகைகள் மட்டுமே என்று தனது தந்தை கமல்ஹாசன் தனக்கு சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்துள்ளதாகவும், அவருடைய அறிவுரையை முடிந்தவரை தான் கடைபிடித்து வருவதால்தான் தன்னால் ஸ்லிம் உடம்பை மெயிண்டன் செய்ய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு மிகவும் பிடித்த பட்டர் பிரான், மற்றும் calamari  என்ற கடல் உணவை மட்டும் தன்னால் கைவிட முடியவில்லை என்று கூறும் ஸ்ருதி, தன்னுடைய நட்பு வட்டாரங்களில் உள்ளவர்கள் அனைவரும் சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது விஷாலுடன் 'பூஜை' படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இந்தியில் மட்டும் அவர் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரும்புக்குதிரை படத்தில் நடித்த அனுபவம். இந்தியாவின் முதல் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா பேட்டி.



 

அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'இரும்புக்குதிரை' திரைப்படத்தில் வில்லன் ஜானியின் காதலியாக நடித்திருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் உண்மையிலேயே ஒரு பைக் ரேஸ் வீராங்கனை. இந்த படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவம் குறித்து அலிஷா சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

 'இரும்புக்குதிரை' படத்தில் வில்லன் ஜானியின் காதலியாக நடித்தது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து பைக் ஓட்டும் காட்சிகளில் நடித்தபோது மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. இருவருமே நல்ல பைக் ரேஸ் அனுபவம் உள்ளவர்கள் எனினும் படப்பிடிப்பிற்காக நடிக்கும்போது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன். அந்த சமயத்தில் ஜானிதான் எனக்கு தைரியம் கொடுத்தார்.

ஜானி வியட்நாமில் உள்ள ஒரு பைக் நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. இதை அவர் என்னிடம் படப்பிடிப்பின்போது கூறியபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் பைக் ஓட்டும் அழகே தனி ஸ்டைல். அந்த அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

படப்பிடிப்பின்போது அதர்வா மற்றும் ப்ரியா ஆனந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதர்வா உண்மையிலேயே பழகுவதற்கு ஒரு இனிமையான மனிதர். அதர்வா மற்றும் ப்ரியா ஆனந்தின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆனதை நாங்கள் படப்பிடிப்பு தளத்திலேயே பார்த்து ரசித்தோம் என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies