மேகா - திரை விமர்சனம்-செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

29 Aug,2014
 



பெண் பார்க்கும் படலம் நடக்கும் இடத்தில், காதலிக்கு அவள் வீட்டிலேயே, அவள் தோழிகள் எதிரிலேயே, இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுத்துவிட்டு, "ஸாரி, எனக்கு இப்படித்தான் பிரபோஸ் செய்யத் தெரியும்" எனச் சொல்லும் காதலன். இதே துணிச்சலுடன் ஒரு கொலையைத் துப்பறியும் கதை தான், மேகா.

 

மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்திருக்கும் அஸ்வின், இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். அவருக்கும் சிருஷ்டிக்கும் இடையே அரும்பும் காதல் தான் முதல் பாதி. தடயவியல் நிபுணராக நடித்திருக்கும் அஸ்வின், தன்னை வளர்த்து ஆளாக்கிய விஜயகுமார் திடீரெனத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தபோது, அது தற்கொலை இல்லை, கொலை எனக் கண்டுபிடிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி, அது கொலை என்பதற்கான தடயங்களைச் சேகரித்து நிரூபிப்பதுதான் மிச்சக் கதை.

மேகா - திரைப்படக் காட்சிகள்

அஸ்வின் - சிருஷ்டிக்கு இடையிலான காதல், ஒரு செல்லுலாய்டு கவிதை.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் திடீர் மழை. அருகில் நிற்கும் சிருஷ்டியின் குடைக்குள் தஞ்சம் புகுகிறார் அஸ்வின். குடை எடுத்து வராட்டி இப்படித்தான் கஷ்டப்படணும் எனச் சிருஷ்டி சொல்ல, இதில் என்ன கஷ்டம் இருக்கு? கொண்டு வந்திருந்தால், இப்போ உங்க குடைக்குள், இவ்வளவு பக்கத்தில் நான் நின்றிருக்க முடியுமா, என அஸ்வின் கேட்பது, நல்ல தொடக்கம்.

 

அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது, எப்படிக் கூப்பிடுவது என அஸ்வின் கேட்க, சிருஷ்டி ஒற்றை விரலால் மேகத்தைக் காட்டுகிறார். மேகா என்ற பெயரை அவர் ஒரு குறியீடாகக் காட்டும் காட்சி அது.

 பகுதி நேரப் புகைப்படக் கலைஞராக அஸ்வின், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்தில் படம் எடுக்கப் போகும் போது அடிக்கும் லூட்டி தூள். அவரைத் தனியே படம் எடுத்துத் தள்ளுவதும் கையில் இதய வடிவில் மெகந்தி போட்டு விடுவதும் அவரது ரவிக்கை அளவைத் திருத்துவதற்காக நள்ளிரவில் தையல்காரரிடம் அழைத்துச் செல்வதும் ஒரே இயர்போனில் இருவரும் பாட்டுக் கேட்பதும் மழை பெய்யும் நள்ளிரவில் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும் கவித்துவமான காட்சிகள்.

 அடுத்த நாள், "இவளை அழகாய் ஒரு படம் எடுத்துக் கொடுப்பா. மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பணும்" எனச் சிருஷ்டியின் அம்மா சொல்ல, "அழகாகவா? கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் பார்க்கிறேன்" என அஸ்வின் சொல்வது சிரிப்பை வரவழைக்கும்.படத்தில் வசனங்களும் மிக நயமாக அமைந்துள்ளன.

 முன்னே சொன்ன முத்தக் காட்சியில், அருகில் உள்ள தோழிகள் அதிர்ச்சி அடைந்து, "இங்கே நாங்களும் இருக்கோம்" என்கிறபோது, "ஸாரி, உங்களுக்கெல்லாம் கிடையாது. மேகாவுக்கு மட்டும் தான்" என அஸ்வின் சொல்வது நல்ல நகைச்சுவை.

 

அதே காட்சியில் "என்னை உனக்குப் பிடிக்கும் என எனக்குத் தெரியும்" என அஸ்வின் சொல்லுகையில், "எப்படித் தெரியும்" எனச் சிருஷ்டி கேட்கிறார். "என்னைப் பார்க்கும்போது, நீ ரொம்ப அழகாக இருப்பாய்" என அஸ்வின் சொல்வது நளினம். உள்ளூரக் காதலித்தாலும், காதலிக்கும்போது ஒருவர் கூடுதல் அழகாகிவிடுவதை அனுபவித்துச் சொல்லும் இடம் இது.

 

ஒரு பூங்காவில் அஸ்வின், சிருஷ்டியிடம் முத்தம் கேட்க, "பொது இடத்தில் இதெல்லாம் கூடாது" என அவர் சொல்ல, அவரது இதழைப் பிடித்து, "இது பொது இடமா? எனக்கு மட்டுமேயான இடமாச்சே" என அஸ்வின் சொல்வது, அடுத்த பஞ்ச்.


காதல் அத்தியாயம் ஒரு புறம் பிரமாதப்படுத்த, திரில்லர் மறு புறம், படத்துக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது. தடயவியல் நிபுணராக, கொலையாளி விட்டுச் சென்ற தலைமுடியை வைத்துத் துப்பறிவது, சுவாரசியம்.

 

அஸ்வின், தமிழில் அடுத்த சாக்லேட் பாயாக உருவாக வாய்ப்புண்டு. அழகும் உறுதியும் தெளிவும் கம்பீரமும் அவர் பாத்திரத்தில் வெளிப்படும் அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள சிருஷ்டி, மென்மையாக, இனிமையாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அங்கனா ராய், ஒய்.ஜி மகேந்திரன், ஜெய்பிரகாஷ், விஜயகுமார், ரவிபிரகாஷ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் கார்த்திக் ரிஷி, சுப்ரமணிய சிவாவிடம் அசோசியேட்டாக பணிபுரிந்திருக்கிறார். இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு, செதுக்கி எடுத்திருக்கிறார். லியனார்டோ டாவின்சியின் ஓவியங்களில் உள்ள நிறங்களை மாதிரியாகக் கொண்டு, படத்துக்கு லைட்டிங்கும் கலை அமைப்பும் செய்திருப்பது புதுமை. இந்த அளவுக்கு மெனக்கெட்டு ஆராய்ந்து, அதைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.பி குருதேவ் பாராட்டுக்கு உரியவர். ராம் சுதர்ஷனின் படத் தொகுப்பும் நன்று.

 

இசைஞானி இளையராஜா, படத்தின் தன்மைக்கு ஏற்பச் சிறப்பாக இசையமைத்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாமல் போன ‘புத்தம் புது காலை’ பாடல், இந்தப் படத்தில் டிஜிட்டல் இசையாக, அழகிய முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. மூன்றே அறைகள் கொண்ட வீட்டில் எடுக்கப்பட்ட பாடலும் கவர்கிறது. இளையராஜா, இந்தப் படத்திற்கு 12 நாட்கள் தொடர்ந்து பின்னணி இசை அமைத்து, படத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். மேலும் துல்லியமான ஒலிப்பதிவுக்காக, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) என்ற புதிய தொழில்நுட்பம், இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

 

கிரைம் தொடர்பான சில காட்சிகளில் பழைய நெடி அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதே போல், கிளைமாக்ஸை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எனினும், சதையை நம்பாமல் கதையை நம்பியதற்கும் அரைத்த மசாலாவையே மீண்டும் அரைக்காமல் புதுமையைத் தேடியதற்கும் இந்தப் படக் குழுவினரை அவசியம் பாராட்ட வேண்டும்.


விஜய் டிவியில் நாளை ‘ஜீவா’ இசை வெளியீடுஸ


பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஜீவா’. இமான் இசையமைக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் இது. விஷ்ணுவின் எட்டு வயதில் ஆரம்பமாகி, அவருடைய 15 வருஷ கிரிக்கெட் பயணத்தை சொல்லும் படம் இது. கிரிக்கெட்டரான விஷ்ணுவே இப்படத்தில் நாயகனாக நடிப்பதால் எந்த வித பதட்டமும் இல்லாமல் இயல்பாகவே படமாக்கி வருகிறார்களாம். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில்தான் விஷ்ணுவை நாயகனாக அறிமுகப்படுத்தினார் சுசீந்திரன்.

எல்லா நாட்டுலயும் விளையாட்டு வீரர்கள் விளையாடித்தான் தோத்துப் போவாங்க. ஆனால், நம்ம நாட்டுலதான் ஒரு வீரன் வாய்ப்புக் கிடைக்காமலேயே தோத்துப் போவான். இந்திய நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்கிற பிரபலத்தை வச்சித்தான் கிரிக்கெட்டை கதைக் களமா வச்சிருக்கேன். எல்லா திறமைகள் இருந்தும் ஒருத்தன் எப்படி எல்லாம் பேராட வேண்டி இருக்குன்னு சொல்லியிருக்கேன். பத்து வருஷம் கழிச்சி திரும்பிப் பார்த்தால் கூட எனக்கான பெருமையான படமா இந்த ’ஜீவா’ நிச்சயமா இருப்பான் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

‘பாண்டிய நாடு’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் சுசீந்திரனுடன் இமான் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் நாளை விஜய் டிவியில் மூன்று மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘இசையுடன் இமான்’ நிகழ்ச்சியில் முதல் முறையாக வெளியிட இருக்கிறார்கள்.

தமிழுக்கு வரும் ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ஸ


ஆதர்ஷ சித்ராலயா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் சத்ய பிரபாஸ் அறிமுக இயக்கத்தில், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் “யாகாவாராயினும் நா காக்க” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இப்பட நிறுவனம் அடுத்து, தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி வசூலைக் குவித்த “வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்” படத்தைத் தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான மறுபதிப்பு மற்றும் மொழிமாற்றம் (தமிழ்) உரிமைகளை எற்கனவே பெற்றுவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆதி முதன் முதலாக முழு நீள நகைச்சுவை படமான ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ படத்தின் தமிழாக்கத்தில் நடிக்கவுள்ளார். குடும்பப் பிண்ணனியில் நகைச்சுவை சேர்த்து வெளிவந்த ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் தமிழிலும் அனைத்து ரசிகர்களையும் கவரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.


பெங்களூர் எனது இரண்டாவது தாய்வீடு. த்ரிஷா



கடந்த 12 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமான நாயகியாக நடித்து வரும் த்ரிஷா, முதல்முறையாக ஒரு கன்னட மொழி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்று கர்நாடகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து மாபெரும் வெற்றி பெற்ற      Dookudu என்ற படத்தின் கன்னட ரீமேக்கான 'பவர்' என்ற படத்தில்தான் த்ரிஷா கன்னட மொழியில் அறிமுக ஆகியுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகிறது.

கே.மாதேஷ் இயக்கிய படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதும் நல்ல ஹிட் ஆகியுள்ளது.

நேற்று இந்த படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டு பேசிய த்ரிஷா, 'எனக்கு சென்னை சொந்த ஊராக இருந்தாலும், பெங்களூர் எனது இரண்டாது தாய்வீடு மாதிரி. வெறும் நான்கு மணிநேரத்தில் பெங்களூருக்கு நான் வந்துவிட்டேன். புனித் ராஜ்குமாருடன் கன்னடத்தில் அறிமுகம் ஆனதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். இனிமேலும் நிறைய கன்னட படங்களில் நடிப்பேன்' என்று கூறினார்.

த்ரிஷா நடித்து விரைவில் பூலோகம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அவர் அஜீத், ஜெயம் ரவி, ஜெய் ஆகியோர்களுடன் தற்போது நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் மேலும் இரண்டு படங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

6 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நயன்தாராவுடன் இணையும் தனுஷ்.



 

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான தனுஷ் மற்றும் நயன்தாரா நடித்த 'யாரடி நீ மோகினி' வெற்றிப்படம் அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு நல்ல திருப்பத்தை கொடுத்தது. செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய இந்த படத்தை அவருடைய உதவியாளர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். யுவன்ஷங்கர் ராஜாவின் சுப்பர் ஹிட் பாடலுடன் அமைந்த இந்த திரைப்படம் தனுஷ் மற்றும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்.

இந்நிலையில் தனுஷ் - நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய இருப்பதாக தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி வெற்றி படத்தை தயாரித்த தனது Wunderbar Films தயாரிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா தன்னுடன் ஜோடியாக நடிக்கவுள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ள தனுஷ், மிக விரைவில் இந்த படத்தில் பணிபுரியும் இயக்குனர் உள்பட மற்ற தொழில்நுட்ப இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறியுள்ளார்




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies