விஜய்யின் கத்தி படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

28 Aug,2014
 

விஜய்யின் கத்தி படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!

ஏற்கனவே விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருமா? என்பதே சந்தேகமாகியிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த கோபி என்பவர், முருகதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம். அதில் அவர், கத்தி கதையை முருகதாசுக்கு சொன்னதே நான்தான். அந்த கதையை கேட்டவர், கதை நன்றாக இருக்கிறது. அதனால் நானே தயாரிக்கிறேன் என்றுதான் என்னிடம் சொன்னார்.

ஆனால், என்னிடம் வாங்கிய அந்த கதையை இப்போது அவரே விஜய்யை வைத்து இயக்கியிருக்கிறார். சமீபகாலமாக, முன்னணி இயக்குனர்கள இயக்கும் படங்களை எதிர்த்து இந்த மாதிரி உதவி இயக்குனர்கள் வழக்குத் தொடர்வது சகஜமாகி வருவதால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும். எது எப்படியோ, மீண்டும் கத்தி இன்னொரு புதிய பிரச்சினைக்குள் சிக்கியிருக்கிறது.

மெட்ராஸ் – பூலோகம்” ஒரு ஏரியா கதையாமேஸ.!


கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க ‘அட்டகத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘மெட்ராஸ்’ படமும், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘பூலோகம்’ படமும் ஒரே கதையில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு படங்களுமே வட சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் எப்படி சிறந்த பாக்சிங் வீரனாகிறான் என்பதுதான் படத்தின் கதையாம்.

இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி பல மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்றார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் இன்று வரை படம் வெளியாகவில்லை.

‘மெட்ராஸ்’ படம் அக்டோபரில் வெளியீடு என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டதாம். ஆனால், ‘பூலோகம்’ படம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாமலே உள்ளது. அந்தத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் வெளியீட்டில்தான் பிஸியாக உள்ளதாம்.

ஏற்கெனவே, இந்த நிறுவனம் தயாரித்து, பல முறை தாமதப்படுத்தப்பட்டு வெளியான ‘திருமணம் என்னும் நிக்கா’ படம் வந்த சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டுப் போனது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் கார்த்தியும், ஜெயம் ரவியும் அடுத்து வெளியாக உள்ள படங்களில் வெற்றி பெற்ற ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களின் முந்தைய படங்கள் பெரிய வெற்றியைப் பெறாததே இதற்குக் காரணம். இன்னுமொரு விஷயம், இந்த படங்களின் கதையைப் போன்றே இன்னும் இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் தமிழில் தயாராகி வருகிறதாம். “எந்த ஃபாரின் பட சிடியை ஒரே நேரத்துல பார்த்தாங்களோஸ” என இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் கண்டிப்பாகக் கேட்கப் போகிறார்கள்.


ஐ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜெயா டி.வி.


சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சுரேஷ்கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. வாங்கியுள்ளது. ஏற்கனவே ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்த ‘வல்லினம்’, ‘திருமணம் என்னும் நிக்ஹா’ ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையையும் ஜெயா டி.வி. வாங்கியது குறிப்பிடத்தக்கது.

லாபத்தை சரிசமமாக பங்கு போட்டுக்கொடுத்த தனுஷ்!


எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை தனது வொண்டர்பார் பட நிறுவனம் தயாரித்த தனுஷ். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கி சட்டை, காக்கா முட்டை, ஷமிதாப், சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து மனைவி ஐஸவர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும் அவர் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், தனுஷின் இந்த வொண்டர்பார் நிறுவனத்திற்கு அவர் மட்டுமே தயாரிப்பாளர் இல்லையாம். அவரது அம்மா, மற்றும் அவரது மனைவி ஐஸவர்யா, மாமியார் லதா ரஜினி என மேலும் மூன்று பேர் இருக்கிறார்களாம். ஆக நான்கு பங்குதாரர்களுடன் படங்களை தயாரித்து வரும் தனுஷ், ஒவ்வொரு படத்திலும் லாப நஷ்டத்தையும் அவர்களுடன் ஷேர் பண்ணிக்கொள்கிறாராம்.

குறிப்பாக, இதுவரை தான் தயாரித்துள்ள எல்லா படங்களும் ஹிட்டாகியிருப்பதால், ஒவ்வொரு படத்திற்கும செலவு செய்தது போக மீதமுள்ள லாபத்தில் நான்கு பங்கு வைத்து மற்றவர்களுக்கும் ஒவ்வொரு பங்கு கொடுத்து விடுகிறாராம்.

இந்த விசயத்தை கேள்விப்பட்ட ரஜினி, பங்குதாரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினர் என்ற போதும் அவர்கள் கேட்காமலேயே லாபத்தை தனுஷ் பிரித்துக்கொடுப்பது ஆச்சர்யமாக உள்ளது என்று மருமகனை மெச்சி பாராட்டியுள்ளாராம். மாமனாரின் இந்த பாராட்டில் உச்சி குளிர்ந்து போயிருக்கிறாராம் சுள்ளான் தனுஷ்.

 9 படங்கள் ரிலீஸ்: அஞ்சானுக்கு அஞ்சிய படங்கள் களம் இறங்குகிறது


கடந்த இரண்டு வாரங்களாக அஞ்சான் வருகையையொட்டி பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மட்டும் வெளியானது.

அஞ்சானின் வீழ்ச்சி க.தி.க.வ.இயக்கத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தேங்கி இருந்த படங்கள் நாளை வெளிவருகிறது. நாளை (ஆகஸ்ட் 29) 6 நேரடி தமிழ் படங்களும் மூன்று டப்பிங் படங்களும் வெளிவருகிறது. அது பற்றிய ஒரு மினி டிரைலர்ஸ

இரும்பு குதிரை

பரதேசி படத்தில் அழுக்காக நடித்த அதர்வா, படு ஸ்டைலாக மோட்டார் சைக்கிள் வீரனாக நடித்து வெளிவரும் படம். ப்ரியா ஆனந்த் ஹீரோயின் அவரும் பைக்கெல்லாம் ஓட்டி சாதனை படைத்திருக்கிறார். ஆக்ஷன் கம் ரொமாண்டிக் ஸ்டோரி.

சலீம்

நான் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் படம். கிட்டத்தட்ட நான் படத்தின் தொடர்ச்சிதான். சாவை முன்கூட்டியே அறிந்து கொண்ட ஒருவன் ஒரு நாளை தன் இஷ்டப்படி வாழ நினைக்கிறான். அதுதான் கதை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி உள்ளன.

மேகா

மங்காத்தா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் படங்களில் நடித்த அஸ்வின் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம். சிருஷ்டி டாங்கே ஹீரோயின். ஒரு போலீஸ் அதிகாரியை கொன்ற இன்னொரு போலீஸ் அதிகாரி பற்றி துப்பறியும் கைரேகை நிபுணன் பற்றிய கதை. மென்மையான காதலும் தடதட ஆக்ஷனும் நிறைந்த படம். புதுமுகம் கார்த்திக் ரிஷி இயக்கி இருக்கிறார்.

காதல் 20014

2014ம் வருடத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை சொல்லுகிற படம். ஒரு பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அய்யோ கற்பு போய்விட்டதே என்று உயிரை விடாமல். தன் இழப்புக்கு காரணமானவர்களை புத்திசாலிதனமாக பழிவாங்கி விட்டு அது ஒரு விபத்து என்று சொல்லி தன் வாழ்க்கையை தொடருகிற கதை. ஹரிஷ், நேகா ஹீரோ ஹீரோயின். பாய்ஸ் மணிகண்டன் வில்லன்.

சிவப்பு எனக்கு பிடிக்கும்

மும்பை, கோல்கட்டாவில் இருப்பது போன்று எல்லா நகரங்களிலும் சிவப்பு விளக்கு பகுதி அமைக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை வழியாக சொல்லும் கதை. எழுத்தாளர் யுரேகா இயக்கி உள்ளார்.

புதியதோர் உலகம் செய்வோம்

லஞ்ச ஒழிப்பை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற அப்துல் கலாம் சொன்ன வாக்கியத்தை மையமாக வைத்து தயாராகி இருக்கும் படம். சிறுவர்கள் லஞ்சம் வாங்கும் தங்கள் பெற்றோரை திருத்துகிற கதை. சின்னத்திரை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இது தவிர ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் புரோசோன் நடித்த தி நவம்பர் மேன். ஹாலிவுட் அனிமேஷன் படமான நிஞ்சா டர்ட்டிஸ், தெலுங்கு படமான ரபாசா ஆகியவையும் ரிலீசாகிறது

சமந்தாவின் கிளாமருக்கு ஏகப்பட்ட செலவு ஆயிடுச்சாம்!

தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
imagesகேமரா என்ற மாயக்கண்ணாடி வழியே பட்டாம்பூச்சிகளாய் நடிகைகளை பளிச்சிட வைப்பவர்கள் ஒளிப்பதிவாளர்கள். முன்னதாக ஒரு நடிகையை அழகாக காட்டுவதற்கு மேக்கப், காஸ்டியூம் என்று தொடங்கி லொகேஷன், லைட்டிங் என பல விசயங்களிலும் சிரத்தை எடுக்கிறார்கள்.

அதையும் தாண்டி போஸ்ட் புரொடக்சன் ஒர்க் என்று வரும்போது, சிஜி என்ற கலர் கரெக்சன் ஒர்க்கில் ஒவ்வொருவரின் தோலுக்கேற்ப நிறைய கரெக்சன் செய்வார்கள்.

அப்படி அஞ்சான் படத்தில் நடித்த சமந்தாவுக்கு நிறைய கரெக்சன் தேவைப்பட்டதாம். ஏற்கனவே அவர் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஓவர் லைட்டிங் கொடுக்காமல் படமாக்கினாராம் சந்தோஷ்சிவன்.

அதனால் அவரது மேனியை பளிங்கு கல் போன்று பளிச்சிட வைப்பதற்காக சிஜி ஒர்க் செய்பவர்கள் மாதக்கணக்கில் சிரமப்பட்டிருக்கிறார்களாம்.

அந்த வகையில், அதற்கே ஒரு பெரிய தொகை செலவாகி விட்டதாம். அதனால்தான், சமந்தாவை அடுத்தடுத்து கிளாமராக்கிக் காட்ட வரிந்து கட்டிய ஆந்திர பட அதிபர்கள், இந்த சேதியைக்கேட்டு கிளாமருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் சிலரோ காஸ்ட்லியான கிளாமருக்கு காஸ்ட்லியாக செலவு செய்தால்தான் முடியும் என்று மீண்டும் சமந்தாவுக்கு பிகினி உடையணிந்து அழகு பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.


அஜீத்துடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சிஸத்ரிஷா பேச்சு!


தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஒரு ஹீரோயினாக 12 வருடங்களுக்கும் மேல் இருந்து வருபவர் த்ரிஷா. இந்தியில் கூட சில வருடங்களுக்கு முன் நடித்து விட்டார். ஆனால், பக்கத்தில் இருக்கும் கன்னடத்தில் நடிக்காமலே இருந்தார். அதையும் தற்போது நிறைவேற்றி விட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகும் ‘பவர்’ திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள த்ரிஷா கன்னடத்தில் சரியான அறிமுகத்திற்காக காத்திருந்ததாகச் சொல்கிறார்.

இப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய த்ரிஷா, “தமிழிலும், தெலுங்கிலும் என்னுடைய அறிமுகப் படங்கள் எனக்கு சரியாக அமைந்தன.

அதே போல்தான் கன்னடத்திலும் அறிமுகமாக வேண்டும் என்று இருந்தேன். ‘பவர்’ படம் எனக்கு சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. எந்த மொழியிலும் அறிமுகம் என்பது கமர்ஷியலாகவும், நல்ல கதையுடனும் அமைய வேண்டும். அது எனக்கு இந்தப் படத்தில் கிடைத்துள்ளது.

கன்னடத்தில் நான் வேண்டுமென்றே தாமதமாக அறிமுகமாகவில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் என்று இருந்தேன். ஆனால், வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் தெலுங்கு ஒரிஜனலான ‘தூக்குடு’ படத்தைப் பார்த்தேன்.

அஜீத்துடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆக்ஷன் படங்களிலும், சரித்திரப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை வெறும் 20 சதவீதம்தான் அப்படி நடித்துள்ளேன். இன்னும் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் எவ்வளவோ உள்ளன.

கன்னடத்தில் நடிப்பது எனக்கு கடினமாக இல்லை. செட்டில் பலரும் தமிழ் பேசுவதால் எனக்கும் ஈஸியாகவே உள்ளது. பெங்களூரு எனக்கு இரண்டாவது தாய்வீடு போலத்தான். சென்னையிலிருந்து நான்கு மணி நேரங்களுக்குள் வந்துவிடலாம், ” என்றார் த்ரிஷா.

கெளதம் மேனன் படத்துடன் நடிப்பில் இருந்து விலகலா? அஜீத்தின் அதிர்ச்சி முடிவு



கவுதம் மேனனின் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு ஒரு லாங் விடுமுறையை அறிவிக்க இருக்கின்றாராம் அஜீத். ஷாலினிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் முடிவெடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் முதுகு ஆபரேஷனையும் இந்த விடுமுறையில் முடித்துவிட அவர் முடிவு செய்துள்ளாதாகவும் கூறப்படுகிறது,.

எனவே அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை அவர் தனது நிலையை எடுத்து கூறி தவிர்த்து வருகின்றாராம். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தல 55 திரைப்படம் வரும் 2015ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த வருடம் முழுவதும் அஜீத் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த படம் 2016ஆம் ஆண்டில்தான் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கடும் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தல, . 'உடம்பை ஃபிட்டா வெச்சுக்க பாக்ஸிங் நல்ல சாய்ஸ்!’ என்று தனது நண்பர்கள் வட்டாரத்திலும் கூறி வருகின்றாராம். அவர் தன்னை பார்க்க வரும் ரசிகர்களிடமும் ஜிம்முக்கு போய் நேரத்தை வேஸ்ட் செய்வதை விட பாக்ஸிங் கற்றுக்கொண்டால் உடம்புக்கும் நல்லது, ஒரு கலையை கற்றுக்கொண்டது போலவும் இருக்கும் என்கிறாராம் தல..பைக் ரேஸ், கார் ரேஸ் இவைகளை அடுத்து தல பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை



த்ரிஷா புயல் இனி கர்நாடகாவைக் கடக்குமா என பார்ப்போம்ஸ!

அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு: ஐ பட விழாவில் கலந்து கொள்ள முறைப்படி அழைப்பு!


விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் ச



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies