ரஜினியின் ‘லிங்கா’வுக்கு அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்புகள் துளிகள் செய்தித் துளிகள்

27 Aug,2014
 

             


சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்திற்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லிங்கா. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லிங்கா படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அது பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

வை ராஜா வை படத்தைப் பார்த்து மகிழ்ந்த ரஜினிகாந்த்


தனுஷை வைத்து ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே படம் பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற கொலவெறி பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் டாப்சி, டேனியல் பாலாஜி, மனோபாலா, விவேக் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வேல் ராஜ் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், இப்படத்தை பிரத்யேகமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டு காண்பித்துள்ளார். இப்படத்தை ரஜினி மிகவும் ரசித்து பார்த்ததாகவும் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறியதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.

தற்போது ரஜினியை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றது.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா, “எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தபோது, சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கும் அளவுக்கு எனக்கு போதிய அனுபவம் இல்லை. எந்த இயக்குனராக இருந்தாலும், அவரது படத்தை இயக்குவது கனவாக இருக்கும். அந்த வகையில், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்றார்.




நடிகை சாவித்திரி கதை கேட்டு அழுத திரிஷா


மறைந்த பழைய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை கேட்டு திரிஷா கண்கலங்கினார்.

பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்க திரிஷா வந்து இருந்தார்.

சில காட்சிகளில் நடித்த அவர், ஓய்வு எடுப்பதற்காக சிறிது நேரம் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, தெலுங்கு பட உலகை சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் சாவித்திரியின் வாழ்க்கை கதையைப் பற்றி பேச துவங்கினார்.

த்ரிஷாவை ஏமாற்றி ஹன்சிகாவை கைப்பிடித்த 'என்றென்றும் புன்னகை' இயக்குனர்.


ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து உதயநிதி ஸ்டாலின் தற்போது நண்பேண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் உதயநிதி புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அஹ்மது இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.,

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா இந்த படத்தில் அவருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஹீரோயினி சான்ஸை பிடிக்க இயக்குனர் அஹ்மதுவின் முந்தைய பட நாயகி த்ரிஷா பெரும் முயற்சி செய்ததாகவும், ஆனால் உதயநிதியின் வற்புறுத்தலால் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. த்ரிஷாதான் தனது அடுத்த படத்தின் ஹீரோயின் என்று அஹ்மது ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உதயநிதியின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தை மிஸ் செய்கிறார். இந்த படத்திற்கு அனிருது இசையமைக்கிறார். உதயநிதி தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.




12 மணி நேரம் மேக்கப் போட்ட விக்ரம்ஸ!


ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் ‘ஐ’ படத்திற்காக மட்டுமே உழைத்து வருகிறார். எதைப் பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாமல் முழு அர்ப்பணிப்புடன் படத்தில் அவர் நடித்துக் கொடுத்துள்ளதாக பாராட்டுகிறார்கள். இதுதான் அவருடைய தனித்துவம் என்கிறார்கள்.

படத்தில் அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒரு தோற்றத்திற்காக மட்டும் ஏறக்குறைய 12 மணி நேரம் மேக்கப் போட வேண்டுமாம். அதை அவ்வளவு பொறுமையாக ஏற்றுக் கொண்டு, அதன் பின் நடிக்க வருவாராம்.

ஒரு தோற்றத்திற்காக தன்னை 120 கிலோ எடை கொண்டவராக மாற்றியவர், பின்னர் வேறு ஒரு தோற்றத்திற்காக 60 கிலோ வரை குறைத்துக் கெண்டாராம். இந்த அளவிற்கு கடுமையாக உழைக்கும் தமிழ் நடிகர்கள், ஏன் இந்திய நடிகர்கள் யாருமே இல்லை என விக்ரமை பாராட்டித் தள்ளுகிறார்கள் படக்குழுவினர்.

மேக்கப்பும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் படத்தின் ஹைலைட்டான விஷயங்களாம். அந்த இரண்டுமே இதுவரை தமிழ் சினிமா பார்த்திருக்காத அளவிற்கு கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். சீனாவில் மட்டும் ஒரு சண்டைக் காட்சி மற்றும் பாடல் காட்சியை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பார்த்து ரசிகர்கள் நிச்சயம் ஆச்சயரிப்படுவார்களாம். ‘ஐ’ படம் தீபாவளிக்கு வர இருப்பதை முன்னிட்டு மற்ற நடிகர்கள் அவர்களது படங்களை தள்ளி வைக்க முடிவு செய்துவிட்டார்களாம்.

ஐ என்றால் என்ன அர்த்தம்? ரகசியம் உடைந்தது



ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் பற்றி தினம்தினம் வெளிவரும் செய்திகளால் ரசிகர்கள் அதிகபட்ச ஆச்சரியத்தில் திளைக்கக்கூடும்.

ஐ படம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா? இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட திரைஉலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ஐ படத்தின் ஆடியோவை அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் வெளியிட, கமல், ரஜினி இருவரும் பெற்றுக் கொள்கிறார்கள். இசை வெளியீட்டை முடித்த கையோடு ஐ படத்தை உலகமெங்கும் கிட்டத்தட்ட 20000 திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

சீனாவில் மட்டும் சுமார் 15000 தியேட்டர்களில் மிகப்பெரிய அளவில் வெளியிடப்போவதாகவும் சொல்கிறார் ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இதற்கிடையில், ஐ படத்திற்காக விக்ரம் போட்டிருக்கும் கெட்அப் பற்றிய செய்தி ஒன்று தற்போது கசிந்திருக்கிறது. அதாவது ஓநாய் மனிதராக ஒரு கெட்அப்பில் நடித்திருக்கிறார் விக்ரம்.

இந்தத் தோற்றத்திற்காக 70 கிலோ எடையிலிருந்து 120 கிலோ எடைக்கு அதிகரித்து, பின்னர் 50 கிலோவாக எடையைக் குறைத்து கடுமையாக உழைத்திருக்கிறாராம் விக்ரம். அதோடு, இப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளர்களுமான சுபா ஐ என்ற தலைப்பு குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள்.

ஐ என்றால் என்ன? வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், ஆசான், தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என பல அர்த்தங்கள் உண்டு. ஷங்கர் படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு இதில் எதைக் குறிக்கிறது என்பதை விட எவற்றைக் குறிக்கிறது என்று படம் வந்ததும் அறியலாம்! என்று சஸ்பென்ஸ் வைத்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போதும், ஐ படத்தின் கதையை நாம் அறிந்த வரையிலும் தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என்ற அர்த்தத்திலேயே ஐ என்ற தலைப்பை வைத்திருக்கிறார் ஷங்கர்.

ஏனெனில், ஐ படத்தின் கதைப்படி கதாநாயகனான விக்ரம், வில்லனால் படு மோசமாக பழி தீர்க்கப்படுகிறான். அதாவது, விக்ரம் உடம்பில் மிக கொடிய வைரஸை ஊசி மூலம் செலுத்திவிடுகிறான் வில்லன். விக்ரம் உடம்பினுள் செலத்தப்பட்ட அந்த வைரஸ் காரணமாக விக்ரம் உடம்பு உருக்குலைந்துபோகிறது.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் நச்சு பாஷாணம்தான் சரின்னு தோணுது..!



பெண்கள் தொடர்பான சப்ஜெக்ட்டில் ஆர்வம் காட்டும் ப்ரியங்கா சோப்ரா!


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து மேரி கோம் என்ற படம் உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

இப்படம் வருகிற செப் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட படக்குழு படத்தின் புரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதன்முறையாக ஒரு ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டில் தான் நடித்துள்ளதால், இந்தப்படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டுள்ள ப்ரியங்கா, இப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார். இதனிடையே தொடர்ந்து ஹீரோயினை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, பாலிவுட்டில் இன்னும் பெண்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. கஹானி, நோ ஒன் கில்டு ஜெசிகா, குயின் போன்ற சில படங்களுக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸிங் வீராங்கனை மேரி கோமை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள், எல்லோரும் என்னிடம் தொடர்ந்து பெண்கள் தொடர்பான படங்களில் நடிக்க சொல்லி கேட்கின்றனர். ஆனால், அதேமக்கள் தான், ‘கிக்’ போன்ற ஹீரோ தொடர்பான படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.


இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய ப்ரியா ஆனந்த்ஸ! ஒரு ஊர்ல இரண்டு ராஜா ஆடியோ விழா கலாட்டாஸ!!


ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை இயக்கிய கண்ணன், தற்போது ஒரு ஊர்ல இரண்டு ராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. விழாவில் படத்தின் ஆடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட இயக்குநர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். ஆடியோ விழாவில் நடந்த நிகழ்வுகள் எல்லாமே ஒரு கலாட்டாவாகவே இருந்தது. அது பற்றிய செய்தி இதோஸ

சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து

காமெடி நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள். முதலில் எல்லோரும் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் சூரி பேசுகையில், என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது சுசீந்திரன் இயக்கி வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு தான். ஆகையால் அந்த படம் ரிலீஸான நாள் தான் எனக்கு பிறந்தநாள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ஈகோ இல்லாத நடிகர் விமல், இந்தப்படத்தில் ராஜாவின் பாதி பதவியை எனக்கு கொடுத்து விட்டார். அவருக்கு நன்றி, என்னை திரையுலகிற்கு அடையாளம் காட்டிய சுசீந்திரன் மற்றும் இதர இயக்குநர்கள், உடன் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இமானை புச்சி என்று கொஞ்சிய ப்ரியா ஆனந்த்ஸ!

ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த மாதிரி தெரியவில்லை, ஒரே கலாட்டா நிகழ்ச்சி போன்று இருந்தது. ஆடியோ விழாவின் ஹைலைட்டே ப்ரியா ஆனந்த் தான்.

விழாவில் பேசிய அவர், எனக்கு இமானை ரொம்ப பிடிக்கும், அவரது கன்னத்தை பிடித்து கொஞ்ச வேண்டும் என எனக்கு ரொம்ப நாளாக ஆசை என்று கூறியவர், மேடையிலேயே இமானின் கன்னத்தை பிடித்து என் புச்சி என்று கொஞ்சி மகிழ்ந்தார். ஒருநிமிடம் இமானே இன்ப அதிர்ச்சியாகிவிட்டார்.

ஜொள் விட்ட நடிகர்கள்ஸ

ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்த் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சி காண்பித்து நடித்துள்ளார். அதிலும் ஒருபாட்டில் அனைவரையும் கிறங்க வைக்கும் அளவுக்கு நடித்துள்ளார். அந்தப்பாடலில் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சியை பார்த்த விழாவுக்கு வந்திருந்த சிங்கமுத்து உள்ளிட்ட பல சீனியர் நடிகர்கள் ஜொள் விடாத குறையாக அவரது நடிப்பையும், கவர்ச்சியையும் ஏகமாக புகழ்ந்தனர். அதோடு இவர்கள், சூரிக்கு நடன சூறாவளி என்ற பட்டமும் கொடுத்தனர்.

காமெடியன்களை தான் ஹீரோயின்களுக்கு பிடிக்கிறது – சிவகார்த்திகேயன்

பொதுவாக எல்லோரும் ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி தான் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள், ஆனால் காமெடி நடிகர்கள் உடன் தான் ஹீரோயின்கள் அதிக நெருக்கமாக பழகுகின்றனர். என்னுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, ப்ரியா ஆனந்த் போன்றோருக்கு சூரியை தான் அதிகம் பிடிக்கிறது. அவர் சொல்றதை அப்படியே நம்புறாங்க என்று சூரியை கலாய்த்தார்,சிவகார்த்திகேயன்.


ஹீரோவை இழுத்து ஓடிய ப்ரியா ஆனந்த் – விமல்

விமல் பேசுகையில், இப்போது மேடையில் பார்த்திருப்பீர்கள் ப்ரியா ஆனந்த் எவ்வளவு சேட்டை செய்தார் என்று, விழா மேடையிலேயே இப்படி என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களை என்ன பாடு படுத்தியிருப்பார் பாருங்கள். ஷூட்டிங்கின் போது ஒருநாள் நான், ப்ரியா ஆனந்த்தை இழுத்து கொண்டு ஓட வேண்டும், ஆனால் அவர் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார் என்றார்.

இப்படியாக விழாவில் பங்கேற்று பேசியவர்கள் அனைவரும் ஒரே கலகலப்பாக பேசி ஆடியோ விழாவை கலகலப்பு விழாவாக்கினர்.

ஆடியோ விழாவில், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், ஸ்ரீகாந்த், விஷ்ணு, தயாரிப்பாளர் மதன், பாடலாசிரியர் யுகபாரதி, ரவி மரியா, யுடிவி தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் களஞ்சியத்தின் உயிரை காப்பாற்ற அஞ்சலி மறுப்பு.,


மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்ற பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies