நாட்களில் ரூ.13 கோடி வசூல். தனுஷுக்கு அஜீத், சூர்யா, தனுஷிடம் தோல்வி அடைந்த விஜய்.துளிகள் துளிகள்

21 Jul,2014
 

             


விஜய், அஜீத், சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய நான்கு நடிகர்களின் 25வது படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வரிசையில் விஜய் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை தந்துகொண்டிருக்கின்றது. இந்த படம் இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் பட்ஜெட்டை தாண்டி கலெக்சனை கொடுக்கும் என்றும், தயாரிப்பாளரான தனுஷுக்கு இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 25வது படம் சிங்கம்' கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸானது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்தார். வெறும் ரூ.15 கோடியில் தயாரான இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 25வது படம் அமர்க்களம். அஜீத், சரண், பரத்வாஜ் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய மூவருக்கும் 25வது படம் பெரும் வெற்றியாக அமைந்துள்ள நிலையில் விஜய்க்கு மட்டும் 25வது படம் படுதோல்விப்படமாக அமைந்தது என்பது குறிப்பித்தக்கது. விஜய், ஷாலினி, பாசில், இளையராஜா, ஆகிய பிரபலங்கள் இருந்தும் விஜய்யின் 25வது படமான கண்ணுக்குள் நிலவு படுதோல்வி அடைந்தது.


3 நாட்களில் ரூ.13 கோடி வசூல். தனுஷுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த வேலையில்லா பட்டதாரி.


தனுஷ் நடித்த 25வது திரைப்படமான 'வேலையில்லா திரைப்படம்' வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் தனுஷ் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியை தனுஷ் மும்பையில் அமிதாப்பச்சனுடன் கொண்டாடியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'வேலையில்லா பட்டதாரி', வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் ரூ.13 கோடி வசூல் செய்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களில் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம்தான் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்சன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 3, மயக்கமென்ன, மரியான் ஆகிய தொடர் தோல்விக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் ஒரு வெற்றியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.4.36 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவில் நல்ல வசூலாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜிகர்தண்டா ரிலீஸ் திடீர் நிறுத்திவைப்பு. தனுஷ் காரணமா?


தமிழ்த்திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற பீட்சா படத்தின் இயக்குனர் இயக்கிய இரண்டாவது படம் 'ஜிகர்தண்டா'. இந்த படம் கடந்த மாதமே ரிலீஸாக வேண்டிய நிலையில் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் ஜூலை 25ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வரும் 25ஆம் தேதி தன்னுடைய 'திருமணம் என்னும் நிக்காஹ்' திரைப்படத்திற்க்காக முக்கிய தியேட்டர்களை கைப்பற்றிவிட்டார். மேலும் கடந்த வாரம் ரிலீஸான தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படமும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதால் வரும் வாரம் எந்த தியேட்டரிலும் அந்த படம் தூக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜிகர்தண்டா படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை ஆகிய இரண்டு தொடர் வெற்றிகளை கொடுத்த லட்சுமி மேனன், இந்த படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த படமும் வெற்றி பெற்றுவிட்டால் அவருடைய சம்பளம் கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியிடும் இந்த படத்தை கதிரேசன் என்பவர் தயாரித்துள்ளார்.


கவுதம் மேனன் கொடுத்த ஐநூறில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்த அஜீத்,.


 

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதுவரை அஜீத் 55 என்றும், தல 55 என்றும் இந்த படத்தை அஜீத்தின் ரசிகர்களும், ஊடகங்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தேர்வு செய்வதில் அஜீத்தும் கவும்தம் மேனனும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அஜீத்திடம் கவுதம் மேனன் சுமார் 500 டைட்டில்களை கொடுத்துள்ளார். அந்த 500 டைட்டில்களில் இருந்து அஜீத் ஒரு டைட்டிலை தேர்வு செய்துவிட்டதாகவும், அந்த டைட்டில் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

கண்டிப்பாக இந்த டைட்டில், கவுதம் மேனனின் முந்தைய படங்களின் டைட்டில் போலவே தூய தமிழில் கவிதைத்தனமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். படத்தின் டைட்டிலை தெரிந்துகொள்வதற்காக அஜீத்தின் கோடானு கோடி ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதத்திற்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிடும் என்றும், எடிட்டிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து 2015 பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என கவுதம் மேனன் கூறியுள்ளார்.

நடிகை கார்த்திகாவுக்கு ஒட்டகம் வாங்கிக்கொடுத்த புறம்போக்கு தயாரிப்பாளர்.


ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடிக்கும் 'புறம்போக்கு' திரைப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. படத்தின் கதைப்படி கார்த்திகா ஒட்டகத்தில் மீது சவாரி செய்வது போன்று காட்சி இருப்பதால் கார்த்திகாவுக்கு இரண்டு ஒட்டகம் சவாரி செய்பவர்கள் பயிற்சி கொடுத்தனர். ஓட்டகத்தை பார்த்ததுமே பயந்த கார்த்திகாவுக்கு பயிற்சியாளர்கள் தைரியம் கொடுத்து பயிற்சி கொடுத்தனர். முதலில் ஒட்டகம் என்றாலே பயந்து நடுங்கிய கார்த்திகா, இரண்டே நாட்களில் ஒட்டகத்தின் தனியாக சவாரி செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டார். இதனை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர்.

ஒட்டகத்தின் காட்சிகள் படமாக்கி முடிந்தும், அந்த ஒட்டகத்தைவிட்டு பிரிய மனமில்லாத கார்த்திகா, அந்த ஒட்டகத்தை தனக்கு விற்றுவிடும்படி ஒட்டக உரிமையாளரிடம் கார்த்திகா கேட்டுள்ளார். ஒட்டக உரிமையாளரும் ஒப்புக்கொள்ளவே அந்த ஓட்டகத்தை வளர்ப்பு பிராணியாக தனதாக்கி கொண்டார் கார்த்திகா. ஆனால் அந்த ஒட்டகத்திற்கு பணம் கொடுத்தது தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?


ரத்தக்கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை போன்ற பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த மறைந்த பிரபல நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன் சொந்த சினிமா நிறுவனம் ஒன்று ஆரம்பித்து அந்த நிறுவனத்தின் சார்பில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த நிறுவனம் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

Town Musicians of Bremen  என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் $45,000 ஆகும்.

இதுகுறித்து ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திவ்யா வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்கள் நிறுவனமும் ஹாலிவுட் நிறுவனமும் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்கின்றோம் என்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமைதான். ஹாலிவுட் நிறுவனம் எங்கள் திறமையை பார்த்து எங்களுக்கு உலக தரத்தில் ஒரு திரைப்படம் தயாரிக்க ஊக்கம் கொடுத்துள்ளனர். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படுவார். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டால், அது நாங்கள் செய்த பாக்கியமாக கருதுவோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் எங்கள் ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நாங்களே சொந்தமாக  ‘வோல்பெஃல்’ என்ற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்க உள்ளோம். இந்திய மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ள இந்த திரைப்படம் உலக அரங்கில் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரனுமாகிய பிரபாகரன் ஹரிஹரன் இதுகுறித்து கூறும்போது, "சினிமா தொழில் எனது ரத்தத்திலேயே ஊறியிருக்கின்றது. நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ, என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ்பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது என்றார்.



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies