கண்ணீரை சமர்பித்த தனுஷ்!உலகப்பட விழாவில் மஞ்சப்பை!ரசிகர் மன்றம் திறக்கப்போகிறாராம் ராய் லட்சுமி!லிங்காரிலீஸ ரஜினி!

20 Jul,2014
 

             


ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில் நடிக்க சென்றார். ஆனால், தமிழில் கிடைக்காத வெற்றியை ராஞ்சனா படம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அப்படம் 100 கோடியை வசூலித்ததால் பாலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகரானார் தனுஷ்.

அதனால் இனிமேல் தனுஷின் மொத்த கவனமும் இந்திக்கு திரும்பி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, இன்னும் 10 வருடத்திற்கு பிறகுதான் இந்தியில் முழுசாக இறங்குவேன்.

அதுவரைக்கும் தமிழில் எனக்குரிய இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வேன் என்று ஒரே நேரத்தில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், வெற்றிமாறன் இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டானார்.

அப்படி அவர் நடித்த படங்களில் வேலையில்லா பட்டதாரி தற்போது திரைக்கு வந்திருக்கிறது முதல் நாள் கலெக்சன் திருப்திகரமாக உள்ளதாம். பல தியேடடர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறதாம்.

இதனால் மயக்கம் என்ன, 3, மரியான் என தான் நடித்த படங்களின் வெளியானபோது தியேட்டர்களில் காத்து வாங்கியதால் கலங்கிப்போய் நின்ற தனுஷ், இப்போது உற்சாகமடைந்திருக்கிறார்.

இதனால் இந்த படத்தை எப்படியாவது 100 நாள் படமாக்கி விட வேண்டும் என்று நினைக்கும் அவர், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருபவர், நீங்கள் கொடுத்த இந்த வெற்றி என்னை ரீ-சார்ஜ் பண்ணியுள்ளது.

சந்தோசத்தில் கண்கள் கண்ணீர் வடிக்கிறது. அதனால் எனது கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று ஆத்மார்த்தமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்

உலகப்பட விழாவில் விமலின் மஞ்சப்பை!

கூத்துப்பட்டறை நடிகரான விமல், விஜய் நடித்த கில்லி படத்தில் ஒரு சிறிய ரோலில் முகம் காட்டியவர், பின்னர், கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் போன்ற படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டினார்.

அதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்படம் ஹிட்டடிக்கவே சற்குணம் இயக்கிய களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விமல்.

இந்த நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து வரும் விமலை, சமீபத்தில் வெளியான மஞ்சப்பை படத்தின் வெற்றி மீண்டும் தலைநிமிர வைத்துள்ளது. இதையடுத்து, சில படங்களின் தோல்வி காரணமாக அவரை மூன்றாம்தட்டு ஹீரோ ரேஞ்சுக்கு பின்தள்ளிய இயக்குனர்களே இப்போது விமலிடம் கால்சீட் கேட்டு துரத்துகிறார்கள்.

இந்த நிலையில், மஞ்சப்பை படம் பிரிக்ஸ் திரைப்பட விருது விழாவில் திரையிடப்படுகிறதாம். ஏற்கனவே, வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றதால் சந்தோசமடைந்த விமல், இந்த படம் அடுத்தடுத்து பல உலகப்பட விழாக்களில் கலந்து கொள்ளவிருப்பதால் இன்னும் சந்தோசத்தில் இருக்கிறார்.

மாரக்கெட்டில் பெரிய நடிகர் இல்லை என்றாலும், நான் நடித்த படம் உலகப்பட விழாக்களில் திரையிடப்படுவதே எனக்கு பெரிய சந்தோசம்தான் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் விமல்.

ரசிகர் மன்றம் திறக்கப்போகிறாராம் ராய் லட்சுமி!


தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அதோடு காஞ்சனா மெகா ஹிட் படத்தின் ஹீரோயினியும்கூட.

ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய உற்சாகத்துடன் நடித்து வருகிறார் அவர்.

அதோடு, தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது இணையதளங்களில் தனது கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ராய் லட்சுமி, தனது பேஸ்புக்கில் வந்து லைக் கொடுக்கும் ரசிகர்களுடன் நட்பை தொடர்ந்து வருகிறார். அதிலும் தன்னை உருகி உருகி ரசிக்கும் இளவட்ட நேயர்களை இனிமேல் சந்திக்கப்போகிறாராம் ராய்லட்சுமி.

அப்படி தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்தி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்போகிறாராம் ராய் லட்சுமி. அந்த ரசிகர் மன்றங்கள் மூலம் த்ரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகள் போன்று சமூக சேவைகளையும் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அதுமட்டுமின்றி, இதுவரை வளர்ந்து வரும் ஹீரோக்கள், வளர்ந்து வரும் டைரக்டர்களை கண்டும் காணாமலும் இருந்து வந்த அவர், இனிமேல் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றாலும் புதுமுக ஹீரோக்களுடனும் நடிப்பாராம்.

அந்த வகையில், சினிமாவைப்பொறுத்தவரை நான் பார்க்காத ஹீரோக்கள் இல்லை, டைரக்டர்கள் இல்லை. முன் வரிசையில் இருக்கும் அனைவருடனும் பணியாற்றி விட்டேன். ஆனால், இப்போது புதியவர்களின் புதிய திறமையை காண வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்களால்தான் என்னை வித்தியாசமான கோணத்தில் சினிமாவில் காட்ட முடியும் என்றும் கருதுகிறேன் என்று சொல்லும் ராய் லட்சமி, தற்போது தமிழில் நடித்துள்ள ஈட்டி, அரண்மனை படங்களைத் தொடர்ந்து நடிப்பதற்கு சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.

பாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!


சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அதையடுத்து ஏராளமான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், கடந்த 17 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

பிரியாணி படத்தில் முதல் சதமடித்த அவர் அடுத்து அஞ்சான் படத்திலிருந்து அடுத்த சதத்தை எதிர்நோக்கி இசையமைக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால் முதல் சதமடிக்கும் வரை தென்னிந்திய படங்களுக்கு இசையமைப்பதிலேயே ஆர்வமாக இருந்து வந்த யுவன், தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இந்தியில் குனால் தேஷ்முக் என்பவர் இயக்கும் ராஜா நட்வர்லால் என்ற படத்திற்கு தற்போது இசையமைத்துள்ளார் யுவன். திரில்லர் கதையான அப்படத்தில் 3 ரொமான்டிக் பாடல்களை கொடுத்துள்ளாராம்.

அதோடு, பாலிவுட்டில் இசைப்புரட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த படத்தில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் யுவன். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி ஹிட்டாகி வருவதால் யுவனின் பெயரும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்

இதையடுத்து, தமிழில் இருந்து இந்திக்கு சென்று கொடிநாட்டிய ஏ.ஆர்.ரகுமானை போன்று அடுத்து யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் இந்தி சினிமாவில் பலமாக காலூன்றும் ஆர்வம் மேலோங்கி உள்ளதால், தற்போது வேறு சில படங்களுக்கு இசையமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகக்காக அவர் மும்பையில் முகாமிட்டுள்ளாராம்.

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி!


லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார்.

அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் அங்குள்ள சில அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. எனவே கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது லிங்கா படக்குழு.

தற்போது ஆந்திராவில் தங்கு தடையில்லாமல் லிங்கு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் லிங்கா படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்புகிறது யூனிட்.

சென்னை திரும்பியதும் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி பார்க்க திட்டமிட்டு உள்ளனர். அதன் பிறகே அடுத்த கட்ட படப்பிடிப்பை முடிவு செய்ய இருக்கிறாராம் ரஜினி. லிங்கா படத்தை தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.


ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் கவுரவ டாக்டர் பட்டம்


கடந்த 20 ஆண்டுகளாக இசைத்துறையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது.

அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் நடைபெறும் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில், சமீப காலமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிக புகழையும் கவுரவத்தையும் தேடித் தந்த ஸ்லம்டாக் மில்லினர், 127 ஹார்ஸ், எலிசபெத்: தி கோல்டன் ஏஜ், மில்லியன் டாலர் ஆம் ஆகிய படங்களில் இடம்பெற்றுள்ள ரகுமானின் இசை தொகுப்பு ஒலிபரப்பப்பட உள்ளது.

தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை உலகிற்கு ஏராளமான பங்களிப்பை தந்துள்ள இத்தகைய சிறப்பான இசைக் கல்லூரியிடம் இருந்து கவுரவ டாக்டர் பெறுவதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன்.

அதிலும், வருங்காலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இசை உலகில் அவர்களின் கனவுகளை அடைவதற்கு என் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பது எனக்க கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன்.

பிரிக்லீ இசைக்கல்லூரி நிர்வாகி ரோஜர் ஹச் ப்ரவுன் கூறுகையில், எனது இந்திய நண்பர்களான ஜான் வில்லியம்சும் ஸ்டிங்கும் தான் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்னிடம் கூறினர். அதனாலேயே உலக அளவில் புகழ்பெற்ற, திறமையான ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகரை எங்கள் கல்லூரிக்கு அழைத்து கவுரவிக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

போஸ்டன் நகரில் நடைபெறும் இவ்விழாவில் இசைக்கல்லூரி மாணவர்கள், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பாடியும் மாணவர்கள் அவரை வரவேற்க உள்ளனர்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசை வகுப்பும் நடத்த உள்ளார். இந்த விழாவின் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட உள்ள ஸ்காலர்ஷிப் நிதிக்காக பயன்படுத்த உள்ளனர்

ஆந்திராவிற்கு சமந்தாவை முன்வைத்து வியாபாரமாகும் அஞ்சான்!


வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமியும், சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யாவும் இணைந்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கதைகள் கேட்ட சூர்யாவுக்கு எந்த கதையிலும் திருப்தி ஏற்படாமல், இந்த கதையை ஓ.கே செய்தார்.

அதற்கு முக்கிய காரணம், லிங்குசாமி சொன்ன ஆக்சன் ட்ராக். மும்பை தாதாக்களுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சிகள் என்று அவர் கதையை விவரித்த விதத்தைப்பார்த்து அசந்துவிட்ட சூர்யா உடனே கால்சீட்டை அள்ளிக்கொடுத்து நடித்தார்.

இப்போது படத்தையும் முடித்து விட்டார்கள். இறுதிக்கட்ட பணிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே படத்தை பல மொழிகளிலும் வியாபாரம் செய்யும் வேலைகளையும் இன்னொரு பக்கம் முடுக்கி விட்டிருக்கிறார் லிங்குசாமி. அதில் தமிழ்நாடு, கேரளாவைப் பொறுத்தவரை சூர்யாவை முன் வைத்து படத்தை வியாபாரம் செய்தபோதும், ஆந்திராவுக்கு சமந்தாவை முன்வைத்துதான் வியாபாரம் பேசப்பட்டு வருகிறதாம்.

அங்கு அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதோடு, சமந்தாவுக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருப்பதால், அஞ்சானில் அவர் வரும் லவ் டிராக்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் லிங்குசாமி. அதோடு, ஷாட்ஸ், டீசர்ட் என்று அவர் மாடர்னாக்கியவர், பாடல் காட்சிகளில் அசைவ நடிகையாகவும் மாற்றியிருக்கிறார்.

இதனால், சமந்தா நடித்த படங்களில் இந்த படம் ஆந்திராவில் நல்ல விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்களாம். ஆனால், தமிழ் ஹீரோ நடித்திருப்பதை காரணம் காட்டி சிலர் படத்தின் ரேட்டை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களாம்.

அதையடுத்து, தமிழ் ஹீரோ நடித்த படம் என்றாலும் ஆந்திர ரசிகர்ளை கருத்தில் கொண்டு சமந்தாவுக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போது படத்தின் விலையை பேச வேண்டாம். படத்தை பார்த்து விட்டு ரேட் பேசலாம் என்று அவர்களை நிலுவையில் வைத்துள்ளாராம் லிங்குசாமி.





Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies