பறக்கும் விமானத்தில் டான்ஸ் ஆடிய ஸ்ருதிஹாசன். அஞ்சலியின் உண்மையான அப்பா நான் தான்

19 Jul,2014
 

              .


சமீபத்தில் சென்னையில் நடந்த 61வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் மிக அற்புதமாக ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நடன நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகைக்கு ஸ்ருதிஹாசன் பேட்டி அளித்தார்.

61வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடுவதற்காக என்னால் சரியானபடி ரிகர்சலில் கலந்துகொள்ள முடியவில்லை. பாலிவுட் படங்களிலும், ஹரி இயக்கும் பூஜை படத்திலும் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால், ஒரே ஒருநாள் மட்டுமே இந்த நடன நிகழ்ச்சிக்கு நான் ரிகர்சல் செய்தேன்.

இந்த நிகழ்ச்சிக்காக காரைக்குடியில் இருந்து மதுரை வரை காரில் வந்துவிட்டு, பின்னர் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தேன். விமானத்தில் பயணம் செய்யும்போது எனது கவனம் முழுவதும் நடன நிகழ்ச்சியில் நான் ஆடப்போகும் ஸ்டெப்ஸ் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் விமானத்தில் எனது இருக்கையில் இருந்து எழுந்து பறக்கும் விமானத்திலேயே ஸ்டெப்ஸ்களை ஞாபகம் வைத்து ரிகர்சல் செய்தேன். அந்த விமானத்தில் பயணம் செய்த சகபயணிகள் என்னை ஒருமாதிரியாக பார்த்தனர். ஆனால் நான் அதுகுறித்து கவலைப்படாமல் விமானத்திலேயே சிறிதுநேரம் ரிகர்சல் செய்தேன் என்று கூறினார்.

தந்தை கமல்ஹாசனைப் போலவே மகள் ஸ்ருதிஹாசனும் முழு ஈடுபாட்டுடன் சினிமா தொழிலில் இருப்பதாக இந்த பேட்டியை பார்த்த சினிமா பிரபலங்கள் கருத்து கூறினர்.

அஞ்சலியின் உண்மையான அப்பா நான் தான். கின்னஸ் சாதனை புரிந்த காமெடி நடிகர் பரபரப்பு பேச்சு..

 

தெலுங்கில் சுமார் 20 வருடங்களில் 754 திரைப்படங்களில் நடித்து உலகில் மிக அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற கின்னஸ் சாதனையை பெற்றவர் காமெடி நடிகர் பிரம்மானாந்தம். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், "அஞ்சலி தன்னுடைய மகளை போன்றவர்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரம்மானாந்தம், அஞ்சலி, ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் நடிப்பில் ராஜ்கிரண் இயக்கியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'கீதாஞ்சலி". இந்த படத்தை சத்யநாராயணா தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரம்மானந்தம், 'நடிகைகளில் இரண்டு வகை உண்டு. பணத்திற்காக எந்த வகை கேரக்டர்களையும் ஏற்றுக்கொண்டு நடிப்பது, நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்று. இதில் அஞ்சலி இரண்டாவது வகையை சேர்ந்தவர். அஞ்சலியை போல தொழில்பக்தியுள்ள ஒரு நடிகையை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அஞ்சலியின் உண்மையான அப்பா யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தவரையில் அஞ்சலிதான் எனது மகள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பேசினார்.

அவருடைய பேச்சை கேட்டு மேடையில் இருந்த அஞ்சலி கண்கலங்கினார். தனக்கு கிடைத்த உறவுகள் எல்லோருமே என்மீது போலியான பாசத்தை வைத்திருந்தார்கள். இந்நிலையில் எனக்கு ஒரு பாசம் மிகுந்த தந்தை கிடைத்திருப்பதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என்று அஞ்சலி கூறினார்.


ஜப்பான் நாவலின் காப்பியா த்ரிஷ்யம்? பூஜை போட்ட பின்னர் கமலுக்கு தெரிந்த அதிர்ச்சி தகவல்



கமல், கவுதமி நடிக்கவுள்ள த்ரிஷ்யம் மலையாள படத்தின் ரீமேக் படத்திற்கு நேற்றுதான் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்று அந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. த்ரிஷ்யம் படத்தை எந்த மொழியிலும் ரீமேக் செய்யக்கூடாது என தடை கேட்டு மும்பை நீதிமன்றத்தில் பிரபல பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வழக்குபதிவு செய்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜிதேந்திராவின் மகளும், தயாரிப்பாளருமான ஏக்தா கபூர், ஜப்பானிய எழுத்தாளர் Keigo Higashino என்பவர் எழுதிய  The Devotion of Suspect X என்ற நாவலை படமாக்கும் உரிமையை ஏக்தா வாங்கியுள்ளார். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது இந்தியில் தயாரித்து வருகிறார். சமீபத்தில் த்ரிஷ்யம் மலையாள படத்தை பார்த்த ஏக்தா கபூர், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நாவலில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் த்ரிஷ்யம் படத்தில் அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஏக்தா கபூர், த்ரிஷ்யம் படத்தை எந்த மொழியிலும் ரீமேக் செய்யக்கூடாது என்றும், இதுவரை வெளியான மொழிகளிலும் தடை செய்யவேண்டும் என்று கோரியும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் கமல், கவுதமி நடிக்கும் படம் பூஜையுடன் கைவிடப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

மேலும் தான் உரிமை வாங்கிய நாவலில் இருந்து காட்சிகளை திருடி தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த த்ரிஷ்யம் பட இயக்குனர் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூஜை போட்ட பின்னர்தான் இந்த தகவல் கமல்ஹாசனுக்கு தெரிய வந்துள்ளதால் அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறுகின்றது.

நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன். சிம்புவிடம் டாப்சி போட்ட கண்டிஷன்
 

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இயக்குனர் பாண்டிராஜனிடம் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டுமானால் ஒரு கண்டிஷன் என கூறி இயக்குனரையும் சிம்புவையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளாராம்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் ஒரு காட்சியில் கூட நடிக்க மாட்டேன். அவருக்கு எனக்கும் சேர்ந்தால்போல் காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்பது தான் டாப்சி இயக்குனருக்கு போட்ட கண்டிஷன். தெலுங்கில் நயன்தாரா, உச்சக்கட்டத்தில் இருந்தபோது நயன் தாரா நடிக்கவேண்டிய ஒருசில படங்கள் டாப்சியின் கைக்கு சென்றது. அதனால் நயன்தாரா, டாப்சியின் மேல் கோபமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து நயன் தாராவிடம் கேட்டபோது, "டாப்சியா யார் அது? என்று பதில் கேள்வி கேட்டு தன்னை அவமதித்ததாகவும், அதனால்தான் நயன்தாராவுடன் அவர் நடிக்க மாட்டேன் என்ற கண்டிஷன் போடுவதாகவும் பின்னர் பாண்டிராஜனுக்கு தெரியவந்தது.

டாப்சியின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டுதான் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் பாண்டிராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வரும் தீபாவளிக்கு இந்த படத்தை திரையிட முடிவு செய்திருப்பதாகவும் பாண்டிராஜ் கூறியுள்ளார்

ஜேம்ஸ்வசந்தன் இயக்கும் புதிய படத்தில் 19 பாடல்கள்.


சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜேம்ஸ் வசந்தன் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் இடம்பெறும் 19 பாடல்களையும் அவரே எழுதி கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

High School Musical'. என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டும் இந்த படம் கல்லூரி மாணவர்கள் கதையை கொண்டது. இந்த படத்திற்காக 19 பாடல்களுக்கு இசையமைத்தது குறித்து கருத்து கூறிய ஜேம்ஸ் வசந்தன், "பழைய எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி படங்களில் 15ல் இருந்து 20 பாடல்கள் தவறாமல் இடம்பெறும். காலப்போக்கில் திரைப்படத்தில் பாடல்கள் குறைந்து ஒரு கட்டத்தில் பாடல்களே இல்லாமலும் படம் வெளிவந்துகொண்டிருக்கிறது. எனவே தமிழ் சினிமா ரசிகர்களை மீண்டும் அந்த காலத்திற்கு எடுத்து செல்லவே இந்த படத்தில் 19 பாடல்களை வைத்துள்ளதாகவும், இதில் ஒரு பாடலுக்கு கூட ரசிகர்கள் எழுந்து தியேட்டரை விட்டு வெளியே செல்லமாட்டார்கள் என்ற உறுதியையும் தான் அளிப்பதாக கூறுகிறார்.

ஹிந்துஸ்தானி, கஜல், பாப், கர்நாடக இசை போன்ற பலதரப்பட்ட பாடல்கள் இந்த படத்தில் இடம்பெறுவதாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies