கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க முடியாது. அலறியடித்து ஓடும் நடிகைகள் துளிகள் துளிகள் துளிகள்

18 Jul,2014
 

             


தயாரிப்பாளர்ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேஷ் நடித்து வெற்றி பெற்ற ஒரே படம் ஜித்தன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்தைராகுல் பரமஹம்சா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வின்சென்ட் செல்வா ஏற்றிருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

என்னதான் வெற்றி பெற்ற படத்தை இயக்கினாலும் படத்தின் வெற்றிக்கு பிரபலமான சில நடிகர், நடிகைகள் தேவை என தயாரிப்பாளரிடம் இயக்குனர் ராகுல் கோரிக்கை வைக்க, செளத்திரியும் தனது மூத்த மகனின் எதிர்காலத்திற்காக ஒப்புக்கொண்டாராம். ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் அலறியடித்து ஓடியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜித்தன் ரமேஷுடன் ஜோடி சேர இனியா சம்மதித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் வி .டி .வி. கணேஷ், தம்பி ராமயா, ஜே பி, மயில் சாமி, மற்றும் சோனா ஆகியோர்களும் நடிக்கின்றனர். ஸ்ருதி என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர்.

த்ரில் மற்றும் மர்மம் கலந்த கதையம்சம் கொண்ட இந்த  படத்தின் போஸ்டர்களை வித்தியாசமாக அமைக்கும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார். ஜித்தன் 2 படத்தின் போஸ்டர்களை பார்த்தவுடனே தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதே தமது எண்ணம் என்கிறார் இயக்குனர் ராகு.

ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி எனக்குள்ளே ரஜினி நுழைந்துவிட்டார். லொள்ளு சபா’ ஜீவா


நீங்க எப்படி சுத்திப் பார்த்தாலும் வெள்ளையைத் தவிர வேற கலர் தெரியாது. ரஜினி சாருக்கு மட்டுமில்ல... காமராஜருக்கும் நான் தீவிரமான ரசிகன். இங்கே பார்த்தீங்களா... எல்லாமே வெள்ளை கலர் கதர் சட்டைகள்'' என அலமாரியைத் திறந்து காட்டுகிறார் 'லொள்ளு சபா’ ஜீவா.  'மாப்பிள்ளை விநாயகர்’ படத்தின் நாயகன்! 

 
'' 'மாப்பிள்ளை விநாயகர்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகியிருக்கும். இவ்வளவு வருஷமாவா ஷூட் பண்றீங்க?''

''இதுல நான் ஹீரோ மட்டும் கிடையாது. எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸரும் கூட. அதனால தான் கொஞ்சம் கவனமாகவே கால் வைக்க வேண்டியதா இருக்கு. இன்னும் 15 நாள் ஷூட்டிங்கை முடிச்சுட்டு, ஜூலை, ஆகஸ்ட்ல ரிலீஸ் பண்ணிடுவோம். தவிர, இன்னும் ரெண்டு படத்துலேயும் ஹீரோவா நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்திருக்கு. புரியலையா? சினிமால என் ரவுண்டு ஆரம்பமாகிடுச்சு!''

''ரஜினி...?'' என முடிப்பதற்குள்...

''என்கிட்ட இது தவிர்க்க முடியாத கேள்விதான்! ஆனா, நான் ஸ்டைல், மிமிக்ரியில் மட்டும் ரஜினியை ஃபாலோ பண்ணலை. 'சந்திரமுகி’ படத்துல ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி, நான் 5-வது படிக்கும்போதே எனக்குள்ள ரஜினி வந்துட்டார். மாறுவேடப் போட்டியில் எல்லோரும் நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மாதிரி வேஷம் போட்டு நடந்தப்போ, நான் மட்டும் ரஜினி மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு தலையைச் சிலுப்பினவன். 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...’ பாட்டுக்கு நான் ஆடினதைப் பார்த்து, எங்க பக்கத்து பள்ளிக்கூட வாத்தியார் அவங்க ஸ்கூலுக்கும் வந்து ஆடச் சொல்லி அடம்பிடிச்சார். அப்புறம் 'லொள்ளு சபா’லயும் ரஜினி கேரக்டர்களா தொடந்து கிடைச்சது சந்தோஷம். இப்பவும், தலைவரோட ரசிகர்கள் எனக்கும் ரசிகர்களா இருக்காங்க. அவங்க வீட்டு விசேஷங்களுக்கு என்னைக் கூப்பிட்டு, 'நீங்க வந்தா, தலைவரே வந்த சந்தோஷம்’னு கூச்சப்படவெச்சுடுறாங்க. இது எனக்குப் பிடிச்சிருக்கு. பாத்தீங்களா... 'ரஜினி’னுதான் ஆரம்பிச்சீங்க... வார்த்தை கொட்டிக்கிட்டே இருக்கு. சௌந்தர்யா மேடம் என்னை 'அப்பாவோட ஜெராக்ஸ்’னு மத்தவங்ககிட்ட அறிமுகப்படுத்திவைக்கிறாங்கனா, அது தலைவர் மேல இருக்கிற வெறிதான் காரணம். ஐ லவ் தலைவர்''

''இவ்ளோ தீவிரமா இருக்கிறதைப் பார்த்து ரஜினி என்ன சொன்னார்?''

'''கோச்சடையான்’ படத்துல ரஜினி சாருக்குப் பதிலா மோஷன் கேப்சர்ல சில காட்சிகள் நடிச்சேன். என்னோட எல்லா மேனரிசங்களையும் அமைதியாப் பார்த்துக்கிட்டே இருப்பார். 'எவ்ளோ வருஷமா இந்த மாதிரி?’னு கேட்டார். பொறந்ததுல இருந்தே இப்படித்தான்னு பதில் சொன்னேன். இதையே 'மாப்பிள்ளை விநாயகர்’ படத்துல 'நான் பொழைப்புக்காக ரஜினி ரசிகன் இல்லைடா... பொறந்ததுல இருந்தே ரஜினி ரசிகன்’னு வசனம் வெச்சிருக்கிறதையும் சொன்னேன். அவருக்கே உரிய ஸ்டைல்ல சிரிச்சார். முக்கியமான விஷயம், 'கோச்சடையான்’ ஷூட்டிங்ல ஒவ்வொரு நாளும் தலைவரைப் பார்க்கிறப்போ, என்னோட ஆட்டோகிராஃப் போட்டு தினமும் ஒரு புத்தகத்தைப் பரிசா கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு 'எனக்கேவா?’னு அதிர்ந்து சிரிச்சார். என்னுடைய புத்தகங்களும் சரி, நானும் சரி... ரஜினி சாரோட 'குட் புக்’ல என்னைக்குமே இருப்போம்.''

''சின்னச் சின்ன கேரக்டர்ல சில படங்கள். தனி ஹீரோ. இதுல எதைத் தேர்வு செய்றதுனு ரொம்பவே தடுமாறிக்கிட்டு இருந்தீங்களோ?''

'''லொள்ளு சபா’ல என்னைப் பார்த்துட்டு, திடீர்னு சினிமாவுல பார்த்த ரசிகர்கள் 'இன்னொரு காமெடி நடிகர்’னு நினைச்சுட்டாங்க போல. ஆனா, நான் சினிமாவுக்கு வரும்போதே ஹீரோ ஆகணும்னுதான் வந்தேன். எத்தனை வருஷம் காத்திருக்கோம்கிறதைவிட, எதுக்காக காத்திருந்தோம்கிறதுதான் ரொம்ப முக்கியம். இடைவெளியை நிரப்பணும்னு கிடைக்கிற கேரக்டர்ல எல்லாம் நடிச்சுக்கிட்டு இருந்தா, நிரந்தரமான இடைவெளி கிடைச்சுடும். அதனாலதான் 'வாய்ப்புகளைத் தேடாதே, உருவாக்கு’னு ரஜினி சார் சொன்ன விஷயத்தைப் ஃபாலோ பண்ணி, நானே தயாரிக்கிற 'மாப்பிள்ளை விநாயகர்’ல ஹீரோவாகிட்டேன்.''

''சந்தானமும் நீங்களும் அண்ணன் - தம்பி மாதிரி. அவருமா உங்களுக்குக் கை கொடுக்கலை?''

''அதெல்லாம் மீடியாக்கள்ல வர்ற வதந்தி. 'மாப்பிள்ளை விநாயகர்’ படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பண்ணினது சந்தானம்தான். பொதுவா அதிக உரிமையை நான் யார்கிட்டேயும் எடுத்துக்க மாட்டேன். ஆனா, சந்தானம் சாரைப் பொறுத்தவரை, நான் அவங்க வீட்டுப் பையன். நான் கேட்காமலேயே எனக்கு அவர் நிறைய சப்போர்ட் பண்ணியிருக்கார்.''

'' 'முந்தானை முடிச்சு’ படத்தோட 'பார்ட் 2’ தான் இந்தப் படமா?''

''எல்லோருமே இப்படியே எழுதிட்டாங்க. 'முந்தானை முடிச்சு’ படத்துல பாக்யராஜ்-ஊர்வசி தம்பதிக்கு இருந்த சின்னப் பையன் வளர்ந்து பெரியவனாயிட்டா எப்படி இருக்கும்கிற ஐடியாதான் இந்தப் படம். காமெடியும் சென்டிமென்ட்டும் கலந்த கதைக்கு எப்பவுமே ரசிகர்கள் இருக்கிறதனால இந்த ஐடியாவைப் பாராட்டினதோட, பாக்யராஜ் சாரும் ஊர்வசி மேடமும் நடிச்சுக் கொடுத்திருக்காங்க!

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது. அமீர்கான் அதிரடி


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் நடிப்பில் எந்திரன் 2 படம் ஆரம்பிக்கவுள்ளதாக பிரபல தமிழ் வார இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அமீர்கான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமீர்கானின் மேனேஜர் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்.

அமீர்கான் தற்போது "3 இடியட்ஸ்" படக்குழுவினர்களின் அடுத்த படமான P.K என்ற படத்தின் வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும், அதன்பின்னர் 'சத்யமேவ ஜெயதே' தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பின் கவனத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் எந்திரன் 2 படத்தில் நடிப்பதற்காக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. முழுக்க முழுக்க ஆதாரமின்றி வெளியாகியிருக்கும் இந்த செய்திக்கு அமீர்கான் தரப்பில் இருந்து கடும் கண்டனம் அந்த பத்திரிகைக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமீர்கான், ரஜினிகாந்த் உள்பட எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வில்லனாக நடிக்க விரும்பாதவர் என்றும், அவர் இதுவரை நெகட்டிவ் ஹீரோவாகத்தான் நடித்துள்ளாரே தவிர வில்லனாக இதுவரை நடித்ததில்லை இனி எதிர்காலத்திலும் அப்படியொரு திட்டமும் இல்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் எந்திரன் 2 படத்தில் நடிப்பது குறித்து எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்திரன் 2 படம் உருவாகுவது சந்தேகம்தான் என கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன், கவுதமி நடிக்கும் த்ரிஷ்யம் ரீமேக் படத்தின் பூஜை. சென்னையில்  நடந்தது.


மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

மலையாளத்தில் சரித்திர வெற்றி பெற்ற த்ரிஷ்யம் சமீபத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிப்பதாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவானது. இந்நிலையில் உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதால் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று சென்னையில் மிக எளிமையாக நடந்தது. இந்த பூஜையில் கமல்ஹாசன் தனது துணைவி கவுதமியுடன் கலந்துகொண்டார்.

மோகன்லால் கேரக்டரில் கமல்ஹாசனும், மீனா கேரக்டரில் கவுதமியும் நடிக்கின்றனர். மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என இந்த படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். உத்தம வில்லன், விஸ்வரூபம் 2, த்ரிஷ்யம் என வரிசையாக கமல்ஹாசனின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள

என் மூக்கை பார்த்து தயாரிப்பாளர் தாணுவே வியப்படைந்தார். விக்ரம் பிரபு பேட்டி


தனக்குத்தானே கேள்வி கேட்டு, பதிலும் சொல்வது தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் பாணி. அதே பாணியில் 'கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்று களம் இறங்குகிறார் விக்ரம் பிரபு.

 
''விக்ரம் என்ற பேர் உனக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்?''

''அளவே கிடையாதுப்பா... ஏன்னா அது அப்பாவோட செலக்ஷன். 'உத்தமபுத்திரன்’ படத்துல தாத்தா நடிச்ச விக்ரமன் என்ற கேரக்டர்ல அப்பா இம்ப்ரெஸ் ஆகி வெச்ச பேர் அது.''

''உன்னோட மூக்கைப் பார்க்கும்போது என்ன தோணுது?''

''ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கும். எனக்கு இந்த மூக்கு. 'உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடிக்கும்போது உன் மூக்கு உனக்கு பெருசா உதவி பண்ணுதுப்பா’னு தாணு சாரைச் சொல்ல வெச்ச மூக்கு இது.''

''தாத்தாவைப் பற்றி உன் மனசுக்குள் இருக்கும் ரொம்பப் பழமையான ஞாபகம்?''

''பொதுவா தாத்தா ஷூட்டிங் இல்லாத நாட்கள்லகூட காலைல சீக்கிரமா எழுந்து குளிச்சு ரெடியாகி எட்டு மணிக்கு ஹாலுக்கு வந்துடுவாங்க. நாங்க மேல மாடியில இருப்போம். கீழே இருந்து ஒரு உறுமல் கேட்கும். அப்படினா நாங்க கீழே சாப்பிட வரணும்னு அர்த்தம். வந்துடுவோம். அப்புறம் தாத்தா வாக்கிங் போகும்போது வெங்கடாச்சலம்னு ஒரு மாஸ்டர் கூடவே இருப்பார். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு 'இந்தப் பசங்களுக்கு எல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா’னு சொன்னாங்க. ஒரு நாள் நான் சீரியஸா ஒரு நீண்ட வரிசை சிலம்பம் ஆடி முடிச்சதும் ஜன்னலுக்குள் இருந்து கைதட்டல் கேட்டது. அப்போதான் தாத்தா அங்கே நிக்கிறதே தெரிஞ்சுது. அந்தக் கைதட்டல் ரொம்ப சந்தோஷமா இருந்தது.''

''அப்பா கொடுக்கும் டஃப் ஃபைட்?''

''ஷூட்டிங்ல டான்ஸ் ஆடுற சீன்ஸ் வந்தாலே எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸும் அப்பாவோட டான்ஸ் திறமையைப் பாராட்டிப் பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதுதான் பெரிய டஃப் ஃபைட்.  நல்லா ஆடலைனா அப்பா என் எதிர்ல நின்னு  கிண்டல் பண்ணி சிரிக்கிற மாதிரியே தோணும்.''

''போர் அடிக்கும்போது என்ன செய்வே?''

''பேசாம நமக்குப் பிடிச்ச டிஷ்ஷை சமைச்சு சாப்பிட்டுட்டுத் தூங்குவேன். கலிபோர்னியாவுல படிச்சப்போ சிக்கன், பர்கர்னு செய்யக் கத்துகிட்ட  சமையலை இப்பவும் செஞ்சு க்ளோஸ் ஃப்ரெண்டஸ்கூட சேர்ந்து சாப்பிடும் இன்ட்ரஸ்ட் இருக்கே, அது தனி சுகம்தான்!'' 

'' 'கும்கி’ முதல் நாள் ஷூட்டிங் போறதுக்கு முதல் நாள் இரவு நடந்த கூத்து...''

''யப்பா... தூக்கமே வரலை. கண்ணை மூடி படுத்துகிட்டு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை  முழிச்சு முழிச்சு 'விடிஞ்சிருச்சா?'னு பாத்துக்கிட்டு, விடிஞ்ச பிறகுதான் ரிலாக்ஸ் ஆச்சு.''

''தாத்தா நடிச்ச படங்களில் பிடிச்ச ஒரு படம்?''

'' 'உத்தம புத்திரன்’.'தெய்வ மகன்’. ஒண்ணோ ரெண்டோ சொல்லி முடிக்க முடியுமா என்ன?''

''பிடிச்ச டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்....?''

''ஹாங்காங், லண்டன், நியூயார்க்.''

''பப்புக்குப் போற பழக்கமே இல்லையாமே?''

ஃப்ரெண்ட்ஸ்கூட ரிலாக்ஸ்டா பேசிட்டு இருக்கறதை விடவா பப் பெரிசு?''

ஃப்ரெண்ட்ஸ்கூட சண்டை வந்தால்?''

''பேசித் தீர்த்துக்கலாம். அப்படித் தீர்க்க முடிஞ்சாதான் அவங்க ஃப்ரெண்ட்ஸ்!''


என் உயரத்திற்கு எந்த தமிழ் நடிகரும் பொருத்தமாக இருக்க மாட்டார். அனுஷ்காவின் திமிர் பேச்சு.



தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களை அவமதித்ததாக அனுஷ்கா மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து அவை சமூகவலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.

அனுஷ்கா சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் கூறியுள்ளார். இவர்களை தவிர தமிழ், தெலுங்கு நடிகர்களை உங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்விக்கு, என்னை கவரும் அளவுக்கு எந்த தமிழ், தெலுங்கு நடிகரும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

அனுஷ்காவின் இந்த பதில் தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் அனேகமாக அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ள அனுஷ்கா, தன்னை இவர்களில் ஒருவர் கூட கவரவில்லை என்று கூறியுள்ளது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து அனுஷ்கா மீது கடும் விமர்சனங்களை ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த அனுஷ்கா, என்னுடைய உயரத்திற்கு பொருத்தமான ஜோடியை தமிழ் மற்றும் தெலுங்கில் கஷ்டப்பட்டு தேடவேண்டிய நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார். இது மேலும் ரசிகர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முந்தைய காதலியிடம் ஆர்யா மீண்டும் நெருக்கம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.


 

அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா மீண்டும் நடிகை பூஜாவுடன் நெருக்க



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies