மருத்துவமனையில் ரஜினி? கலக்கமும் விளக்கமும்-முன்னோட்டம் - சதுரங்க வேட்டை

17 Jul,2014
 



நடிகர் ரஜினிகாந்த் லிங்கா படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் இன்று காலை வெளியான தகவலால் கோடம்பாக்கத்தில் சின்னதாக பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி கே.எஸ்.ரவிக்குமாரின் லிங்கா படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் அவர் நடித்த போது மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை தகவல் பரவியது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் கலக்கமடைந்தனர். எந்த மருத்துவமனையில் தலைவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என பத்திரிகை நிறுவனங்களுக்கு போன் செய்து கேட்டனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் ராணா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில்தான் ரஜினிக்கு முதல்முறை உடல்நிலை சரியில்லாமல் போனது. வாந்தி எடுத்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகே அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் தற்போது நலமாக இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் ரசிகர்கள் கலக்கமடைந்ததில் வியப்பில்லை.

ரஜினி குறித்த தகவல் வேகமாக பரவி வருவதை அறிந்ததும் ரவிக்குமார் உடனடியாக சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்தார். செய்திதாளில் வந்தது போல் ரஜினிக்கு எதுவும் நடக்கவில்லை, அவர் நலமாக இருக்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விளக்கத்துக்குப் பிறகே திரையுலகமும், ரசிகர்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்.

முன்னோட்டம் - சதுரங்க வேட்டை

பணம் இருந்தா என்ன வேணா செய்யலாம் என்று நினைக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதைதான் இந்த சதுரங்க வேட்டை. எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தை நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.



சதுரங்க வேட்டையில் நடித்திருப்பவர் இந்தியில் முன்னணி கேமராமேனாக இருக்கும் நட்டு என்கிற நட்ராஜ். நம்மூர்க்காரர். நடிப்பு ஆசை வரும்போதெல்லாம் தாய்மொழி தமிழில் ஒரு படம் நடிப்பார். விடுமுறைகால நடிகர் என்பதால் அவரை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஏன், பலருக்கு அவரை தெரியவே தெரியாது. படத்தை இயக்கியிருக்கும் வினோத் புதியவர். படம் தயாரான போதும், ரிலீஸுக்கு ரெடியான போதும் பத்தோடு பதினொன்றாகவே இருந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அனைத்தும் மாறிப் போனது.

 

ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கும் போலிருக்கே என்று ஆச்சரியப்பட்டனர். ரஜினிகாந்த் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு மனோபாலாவை போனில் அழைத்து பாராட்டினார். இது உற்சாகமளிக்க லிங்குசாமிக்கு படத்தை திரையிட்டனர். வாரத்துக்கு பத்து படங்கள் பார்க்கச் சொல்லி லிங்குசாமிக்கு அழைப்பு வருகிறது. அதனால் வேண்டா வெறுப்பாகதான் சதுரங்க வேட்டையை பார்க்க உட்கார்ந்திருக்கிறார்.

 

அரைகுறை உறக்கத்திலிருந்தவரை படம் எழுப்பிவிட்டது. படம் முடிந்ததும் அவர் எடுத்த முடிவு, படத்தை திருப்பதி பிரதர்ஸே வெளியிடும்.

 

அதன் பிறகு படத்தின் தலையெழுத்து மாறியது. எதிர்பார்ப்புக்குரிய படமானது சதுரங்க வேட்டை. படத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமின்றி பாலாஜி சக்திவேல், சசி, கார்த்திக் சுப்பாராஜ் என முன்னணி இயக்குனர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி அவர்களையும் பிரஸ்மீட்டில் அழைத்து வந்து பேச வைத்தார். முன்னணி இயக்குனர்களை அசத்திய படம் எப்படியிருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டு இருக்கிறார்கள். 250 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

 

நாளை படம் வெளியாகிறது. ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் வைரமுத்து. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் திருப்பதி பிரதர்ஸ் இந்த வருடம் வெளியிட்ட கோலிசோடா, மஞ்சப்பை வரிசையில் வெற்றி பெறுமா?

 

நாளை தெரிந்துவிடும்.



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies