திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் லாரியில் -சிம்பு- நயன்தாரா தம்பதியினரை பிரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனரா? இல்லை பைத்தியமா?

16 Jul,2014
 

             


 

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முதன்முதலாக வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென தற்போது சன்னிலியோன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சன்னிலியோனுக்கு பதிலாக அந்த பாட்டிற்கு நடனம் ஆட தற்போது நடிகை இனியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சன்னிலியோன் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுக்க தயங்கியதால்தான் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு லாரியில் இனியா மட்டும் தன்னந்தனியாக நடனம் அமைவது போன்ற காட்சிகளை படமாக்க இயக்குனர் கண்ணன் முடிவு செய்துள்ளார். இதற்கு அலங்கரிக்கப்பட்ட லாரி தயாராக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த பாடலில் படப்பிடிப்பு தொடங்கி மூன்று நாட்களில் இந்த பாடலின் படப்பிடிப்பை முடிக்கவும் திட்ட்டமிடப்பட்டு உள்ளது.

விமல்,சூரி, ப்ரியா ஆனந்த், தம்பி ராமைய்யா, நாசர் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் இசையை டி.இமான் அமைக்கின்றார். பி.ஜி.முத்தையா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கமல்ஹாசனின் பி.ஆர்.ஓவாக சித்ரா லட்சுமணன் திடீரென மாற காரணம் என்ன? கோலிவுட்டில் பரபரப்பு


கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து வரும் 'உத்தம வில்லன்' படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, நாசர், விருமாண்டி அபிராமி, மற்றும் இயக்குனர்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் ஆகியோர்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த கூட்டத்தில் புதியதாக இன்னொரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இணைந்துள்ளார். அவர்தான் சித்ரா லட்சுமணன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு கமல்ஹாசன், நிரோஷா நடித்த 'சூரசம்ஹாரம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் மனோரஞ்சனாக நடிக்கும் கமலுக்கு பி.ஆர்.ஓவாக நடிக்க சித்ரா லட்சுமணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சித்ரா லட்சுமணன் கடந்த 40ஆண்டு காலமாக சினிமாத்துறையில் இருந்த அனுபவம் உள்ளதால் ஒரு பி.ஆர்.ஓ எப்படி செயல்படுவார் என்ற விபரங்கள் அனைத்தும் தெரிந்தவர். அதனால் இந்த கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தே அவருக்கு இந்த கமல் இந்த கேரக்டரை கொடுத்துள்ளார்.

சித்ரா லட்சுமணன் இதற்கு முன்னால் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார். சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவரை கமல் தேடிப்பிடித்து மீண்டும் அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு- நயன்தாரா தம்பதியினரை பிரிக்கும் கள்ளக்காதலி ஆகிறார் நடிகை டாப்சி.


கடந்த 2006ஆம் ஆண்டு சிம்பு- நயன்தாரா நடித்து வெளியான வல்லவன் படத்திற்கு பின்னர் எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'இது நம்ம ஆளு'. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார். முதலில் காதலர்களாகவும், பின்னர் தம்பதிகளாகவும் நடிக்கும் சிம்பு -நயன்தாரா, ஏற்கனவே உண்மையான காதலர்களாக இருந்து பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தில் நயன்தாராவை தவிர இன்னொரு நடிகையும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு-நயன்தாரா ஜோடியின் வாழ்க்கையை பிரிக்கும் கள்ளக்காதலி வேடத்தில் நடிக்கிறார் நடிகை டாப்சி. படத்தில் வெறும் பத்து நிமிடங்களே டாப்சியின் காட்சிகள் வருவதாகவும், அந்த கேரக்டர்தான் கதையின் திருப்புமுனைக்கு காரணமாக இருக்கும் கேரக்டர் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பம் படத்திற்கு பின்னர் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் டாப்சி, ஏற்கனவே இதேபோன்ற ஐஸ்வர்யா தனுஷ் இயக்குமர் 'வை ராஜா வை' என்ற படத்திலும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்கள் தவிர நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ள ராகவா லாரன்ஸின் முனி 3 படத்திலும் டாப்சி நடித்து வருகிறார்.


டிரைலருக்கே வெற்றி விழா நடத்திய அஞ்சான், பாடல் வெளியீட்டை ரத்து செய்தது ஏன்? குழப்பத்தில் கோலிவுட்


 

அஞ்சான் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கமல்ஹாசன் தலைமையில் அஞ்சான் படத்தின் ஆடியோ விழா வரும் 22ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இன்று யூடிவி தனஞ்செயன் விடுத்த அறிக்கை ஒன்றில், 'சில தவிர்க்க இயலாத காரணத்தால் அஞ்சான் திரைப்படத்தின் ஆடியோ விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஜூலை 22ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் ஆடியோ சிடி விழா மிக எளிமையாக நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

மீடியாக்கள், மற்றும் ஆடியோ நிறுவனங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் படத்தின் ஆடியோ சிடி அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 23ம் தேதி முதல் 'அஞ்சான்' படத்தின் இசைத்தட்டுகள் நேரடியாக கடைகளில் கிடைக்கும் என்றும் இதனால் அஞ்சான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துவதில் ஏற்பட்ட திடீர் சிக்கலால்தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அஞ்சான் திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இரண்டே நாட்களில் டிரைலர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததாக கூறி அதற்கொரு விழாவை அஞ்சான் படக்குழுவினர் நடத்தினர். டிரைலரின் வெற்றிக்கே விழா நடத்தியவர்கள், பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்ததன் காரணம் என்னவென்று தெரியாமல் கோலிவுட் குழம்பி வருகிறது.

மாஸாக துவங்கியது சூர்யாவின் மாஸ்!


அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான கூட்டணி தான். இப்படத்தின் ஷூட்டிங் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் சூர்யா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், தொடர்ந்து காரைக்குடி உள்ளிட்ட பிற நகரங்களிலும் சில காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

மது மாது சூதுவில் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி

புதுமண தம்பதிகளான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும், ”மது மாது சூது” என்ற படத்தில் இணைந்து பாடி உள்ளனர்.

இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை பற்றிய ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது. அதனை ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவர் மனைவியும் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதிய இசை அமைப்பாளர் சத்யா இருவரையும் அணுக எந்த சம்பளமோ சன்மானமோ இல்லாமல் இருவரும் பாடிக் கொடுத்துள்ளனர். பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.

போதை பழக்கத்தால் சீரழியும் ஒரு இளைஞனின் கதை. இந்தப் படம் ஒரே இரவில் ஒரு மதுபாரில் நடக்கிற சம்பவங்களை கொண்டு ஹேங்கோவர் பட பாணியில் இது தயாராகி வருகிறது. ராஜசந்துரு தயாரித்து, இயக்கி, நடிக்கிறார்.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனரா? இல்லை பைத்தியமா? கத்தி வில்லனின் அதிர்ச்சி பேட்டி


விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'கத்தி' திரைபடத்தின் வில்லனாக நிதின் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கின்றார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து நாசவேலைகள் செய்யும் தீவிரவாதி ஒருவரின் கதாபாத்திரம்தான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகன் விஜய்யுடன் ஒரு சண்டைக்காட்சியில் கூட நீல்நிதின் நடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். விஜய்க்கும் நீல் நிதினுக்கு இடையே ஏற்பட்டும் புத்திசாலித்தன சண்டைதான் படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது. கத்தி என்று படத்துக்கு டைட்டில் விட்டு புத்தியால் ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிறார்கள் என்பதே ஒரு புதிய கான்செப்ட்தான் என்று சிரித்துக்கொண்டெ சொல்கிறார் நீல்நிதின்

 வில்லனாக நடிக்க வரும் நடிகர்களிடம் அனைத்து இயக்குனர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஆனால் கத்தி படத்தில் நடிக்க தன்னை ஒல்லியாகும்படி இயக்குனர் கூறியபோது "இவர் உண்மையிலேயே இயக்குனரா அல்லது பைத்தியமா" என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், பின்னர் படப்பிடிப்பின்போதுதான் அவர் எதற்காக ஒல்லியாக மாறச்சொன்னார் என்பது புரிந்ததாகவும் நீல்நிதின் கூறினார். படம் பார்க்கும் ஆடியன்ஸ்களும் வில்லன் எதற்காக ஒல்லியாக இருக்கின்றான் என்பதை படம் பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.

இந்த படத்தில் ஒல்லியாக மாறுவதற்கு பத்து கிலோ உடலை குறைத்துள்ளாராம் நீல்நிதின். இவர் ஏற்கனவே ஜானி கட்டர் என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்க



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies