720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா: 2020ல் ரிலீசாகிறதுதுளிகள் துளிகள் துளிகள்

15 Jul,2014
 

720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா: 2020ல் ரிலீசாகிறது


தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது “மார்டன் டைம்ஸ் போரெவர்” என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள்.

இப்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வெப்பெர்க் 720 மணிநேரம் ஓடக்கூடிய அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய படத்தை உருவாக்கி வருகிறார்.

அதற்கு “ஆம்பியன்ஸ்” என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படம் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி வெளியிடப்படுகிறது.

கடந்த வாரம் இதன் டீசர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது அதன் நீளம் மட்டும் 72 நிமிடங்கள். இந்த டீசர் வருகிற 20ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இருக்கும். 2016ம் ஆண்டு இதன் டிரைய்லரை வெளியிட இருக்கிறார்கள். டிரைய்லர் மட்டும் 7 மணிநேரம், 20 நிமிடங்கள் இருக்குமாம்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பத்து பிரிவுகளாக நடந்து வருகிறது. இதுவரை 280 மணி நேரத்திற்காக படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மர்சென் ஜூஹிஸ் இசை அமைக்கிறார்.

கடந்த 20 வருடங்களாக திரைப்பட இயக்குனராக இருக்கும் ஆண்டர்ஸ் வெபெர்க், ஆம்பியன்ஸ் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருக்கிறார்.

ஒரு பாட்டுக்கு ஆடினார் விஜய்சேதுபதி

நடனம் சுத்தமாக ஆட வராத நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதனை அவரே பல பேட்டிகளிலும், பேச்சுகளிலும் ஒப்புக் கொண்டிருக்கிறார். முதன்முறையாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஆடினார்.

அதுவே ரொம்ப கஷ்டப்பட்டு ஆடியதாகவும், ராஜு சுந்தரம் மாஸ்டர் கஷ்டமான ஸ்டெப்புகளை அவர் போட்டுக்கொண்டு சிம்பிளான ஸ்டெப்பை எனக்கு கொடுத்தார் என்றும் விஜய் சேதுபதி கூறினார். ஆனால் சினிமா விட்டு விடுமா?

அவரை திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைத்து விட்டார் இயக்குனர் கார்த்திக் ராஜு. படத்தின் இயக்குனரும், ஹீரோவாக நடிக்கும் அட்டக்கத்தி தினேசும் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஆடிக் கொடுத்திருக்கிறார்.
“படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு ஆடும் வாய்ப்பு இல்லை. இதை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஆடக்கூப்பிட்டோம். எனக்கு ஆட வராது பாஸ் என்று சொன்னார். ஸ்பாட்டுக்கு வாங்க நாங்க ஆட வைக்கிறோம்னு சொல்லி அழைச்சிட்டு போய் இரண்டே நாள்ல ஆடவச்சி படமாக்கிட்டோம்.

விஜய்சேதுபதிக்கு நன்றாக ஆட வரும் என்பது இந்த படத்துக்கு பிறகு உலகத்துக்கு தெரியும்” என்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு

சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்ஸ

இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். யு டியூப்பில் அதிகம் பேர் பார்த்துவிட்டார்கள் என்பதெற்கெல்லாம் வேறு விழா எடுக்கிறார்கள்.

‘அஞ்சான்’ படத்திற்கு இப்படி ஒரு விழா நடந்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று ‘அஞ்சான்’ பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடலின் வீடியோ.

சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘ஹேட் ஸ்டோரி 2′ என்ற படத்தில்தான் இந்த ‘பின்க் லிப்ஸ்’ வீடியோ பாடல் இடம் பெற்றுள்ளது. கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

ஆனால், கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பார்த்துள்ளனர். இந்திய அளவில் இந்த இரண்டு வீடியோக்களும்தான் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன.

இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்ட சன்னி லியோன், சூர்யாவை பின்னுக்குத் தள்ளியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அடுத்தடுத்த நாட்களில் யார் யாரை மிஞ்சுகிறார்கள் என கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

இருந்தாலும் ‘ஹேட் ஸ்டோரி 2′ படக்குழுவினர் ‘அஞ்சான்’ டீசருக்கு விழா எடுத்ததுபோல் எந்த விழாவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே ஸ்டில் ஷாட்டில் வெளிவந்திருக்கும் டீசர்

இயக்குனர் சீமானின் உதவியாளர் நாகேந்திரன் இயக்கி உள்ள படம் நீயெல்லாம் நல்லா வருவடா. விமல், புன்னகை பூ கீதா, சமுத்திரகனி, நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத புதுமையாக ஒரே ஸ்டில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள டீசரை வெளியிட்டுள்ளனர்.

49 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. சமுத்திரக்கனி தலைமையிலான ஒரு போலீஸ் டீம் ஒரு மர்ம காரில் இருப்பவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளுகிறது. விமல், கும்கி அஸ்வின், நமோ நாராயணன் ஆகியோர் பயந்தபடி சாய்கிறார்கள்.

இப்படி ஒரு ஷாட்டை 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி கேமரா புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிற மாதிரியான ஷாட் அது.
பல நூறு ஸ்டில் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்படுவதுதான் ஸ்டில் ஷாட் என்பார்கள் பாய்ஸ் படத்தில் சிறகை விரித்து பறவையானது என சித்தார்த், ஜெனீலியா பாடும் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் இந்த முறைப்படி எடுத்தார். இதில் இப்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டது.

ஷங்கர் பயன்படுத்தியதைப்போல 100 கேமராக்கள் தேவையில்லை. ஆனால் நிறைய உழைப்பு வேண்டும்.
இந்த டீசர் உருவான விதம் குறித்து இயக்குனர் நாகேந்திரன் கூறியதாவது: என்னதான் படம் எடுத்தாலும் அந்த படத்தின் டீசர் அந்த படத்துக்கான ஒரு விசிட்டிங் கார்ட்.

அதை புதுமையாக செய்ய வேண்டும் என்று விரும்பினேன் இந்த ஐடியாவை ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்திடம் சொன்னபோது அவர் இதற்கு 15 லட்சம் செலவாகும் என்றார். ஆனால் நான்தான் குறைந்த செலவில் எடுத்துக் காட்டுவோம் என்று சொல்லி அதற்கான முயற்சியில் இறங்கினோம்.

ஒரே கேமராவில் எந்த புளுமெட்டும் இல்லாமல், நடித்தவர்களை அப்படியே சிலை மாதிரி நிற்க வைத்து அவர்கள் முடியோ, அல்லது மரமோ, இலையோ ஆடாத நேரத்தில் இதனை எடுத்தோம். எடுத்த பிறகு சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை சேர்த்தோம்.

ஒரு நாள் முழுக்க இதற்காக அனைவரும் கஷ்டப்பட்டோம். இப்போது மக்கள் அதனை ரசித்து பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என்றார்.

கோலிவுட் ரேட்டிங்கை உயர்த்தும் ஓவியா!

சற்குணம் இயக்கிய களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆனவர் ஓவியா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அசின், நயன்தாராவைப்போன்று கோலிவுட்டில் இவரும் பெரிய இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் சரியான படங்களை தேர்வு செய்யாததால் ஓவியாவின் மார்க்கெட் டவுன் ஆனது.

இருப்பினும், மன்மதன் அம்பு, மெரினா படங்களுக்குப்பிறகு தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டும் முயற்சியாக திடீரென்று கலகலப்பு படத்தில் கவர்ச்சிக்கோதாவில் இறங்கினார் ஓவியா, அப்படத்தில் நடித்த இன்னொரு நாயகியான அஞ்சலியைப்போன்றே அயிட்டம் நடிகைகளுக்கு இணையாக ஓவியாவும் உடம்பைக்காட்டி வளைந்து நெளிந்து நடனமாடியிருந்தார்.

அதனால், இவர் தேற மாட்டார் என்று கழட்டி விட்டவர்கள்கூட இப்போது ஓவியாவை ஹோம்லி, கிளாமர் என இரண்டுவிதமாகவும் யூஸ் பண்ணிக்கொள்ளலாம் என்று வாய்ப்பு கொடுக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில், மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே படங்களுக்குப்பிறகு இப்போது சரத்குமார் ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் மீராநந்தன் ஹோம்லியாக நடிக்க ஓவியாவோ கவர்ச்சி கட்டழகியாக நடிக்கிறாராம்.

அதோடு, புலிவால் படத்தில் பிரசன்னாவுடன் முத்தக்காட்சியில் நடித்த ஓவியா, இந்த படத்தை இயக்குவது கமர்சசியல் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் என்பதால், அவர் என்னென்ன கமர்சியல் யுக்திகளை கடைபிடிக்கச்சொல்கிறாரோ அதன்படி நடித்து, கோலிவுட் ரேட்டிங்கில் தனது பெயரை உயர்த்திக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஓவியா


சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!

சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்வாதிக்கு அதன்பிறகு போராளிக்கு பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதனால் மறுபடியும் அதே ஜெய்யுக்கு ஜோடியாக வடகறி என்ற படத்தில் நடித்தபோது இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற எதிர்பார்த்தார். ஆனால் இந்தமுறை ஜெய் செண்டிமென்ட் அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை.

அதேசமயம், விஜயசேதுபதியுடன் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெற்றி பெற்றது. ஆக, ஏதோ ஒரு வகையில், கோலிவுட்டில் தங்கி விட்டார் ஸ்வாதி. அமளிதுமளி, கார்த்திகேயா ஆகிய படங்களையும் கைப்பற்றி நடித்து வரும் அவருக்கு அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நவ்தீப் மீண்டும் தமிழில் நடிக்கும் லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும் என்ற படத்திலும் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.

அதனால் தமிழில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலமாக காலூன்றி விட வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார். இந்த நிலையில், லவ் பண்ணுங்க லைப் நல்லாயிருக்கும் படத்தைப்பற்றி அவர் கூறும்போது, இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் காதல் கதைகளில் நடித்திருந்தாலும். இதில் எனக்கு வித்தியாசமான காதலி வேடம். காதலிப்பதும், காதலை வெளிப்படுத்துவதும் ரொம்ப புதுமையாக இருக்கும்.

அதனால், இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்ததோடு, காதலிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுவது போல் இருந்தது என்று சொல்லும் ஸ்வாதி, இதே உணர்வு படம் பார்க்கிற ரசிகர்கள் அனைவருக்குமே ஏற்படும் என்று மனம் திறந்து பேசி வருகிறார்.


தயாரிப்பாளராகிறார் செல்வராகவன்!

சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது.

அப்படியே ஓடும் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிப்பதில்லை. அதனால்தான் அந்த படத்தை வெற்றிப்படமாக காட்டிக்கொள்ள தியேட்டருக்கு வந்து 3வது நாளிலேயே சக்சஸ் பிரஸ்மீட் வைத்து வெற்றி பெற்றது போன்று பப்ளிசிட்டி செய்து கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில் இருந்து விலகி விட்டனர்.

அதனால்தான் சில முன்னணி ஹீரோக்களும், டைரக்டர்களும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி விட்டனர். அந்த பட்டியலில், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், தனுஷ், விஷால், ஆர்யா உள்பட பலர் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி விட்டனர்.

இந்த பட்டியலில் இப்போது செல்வராகவனும் இணைந்துள்ளார். ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து அதே நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கப்போவதாக முன்பு சொன்னார். அதனால் சிம்பு-த்ரிஷாவை வைத்து அந்த படத்தை இயக்கப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு கூறி வந்தார்.

ஆனால், இரண்டாம் உலகம் படம் பெரும் நஷ்டத்தை கொடுத்து விட்டதால், அப்படத்தை தயாரித்த நிறுவனம் பின் வாங்கி விட்டது. அதனால், வேறு தயாரிப்பாளர் தேடி அலைந்து கொண்டிருந்த செல்வராகவனுக்கு யாரும் சிக்காததால், இப்போது தனது அடுத்த படத்துக்கு அவரே தயாரிப்பாளராகி விட்டார்.

அந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம். கதை விவாதத்தை மட்டும் தற்போது நடத்தி வருகிறார் செல்வராகவன்

நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்லஸடாப்ஸி கருத்துஸ!

ஆடுகளம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் ‘வை ராஜா வை, முனி -3′ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வவ்போது ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருவது இவருடைய வழக்கம். அப்படித்தான் சமீபத்தில் திருமணமான நடிகைகளை அதன் பின் நாயகியாக நடிக்க வைக்க மறுப்பது இந்தியத் திரையுலகின் சாபக்கேடு என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

“ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலோ அல்லது அவர்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தாலே இங்கு அப்படியே வாய்ப்பு தராமல் ஓரம் கட்டி விடுகிறார்கள். ஆனால், ஹாலிவுட்டில் 40, 50 வயதிலும் ரொமான்டிக் காட்சிகளில் அங்குள்ள நடிகைகள் நடிக்கிறார்கள். இது இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சாபக்கேடு. திருமணமான பின் ஒரு நடிகையால் காதல் காட்சிகள் நடிக்க முடியாதா என்ன ?.

அதன் பின், முத்தக் காட்சியில் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்களுக்க அக்கா வேடமோ, அல்லது அண்ணி வேடமோ கொடுப்பது முறையல்ல. நான் திருமணமான பின்னும் தொடர்ந்து நடிப்பேன், எனது கடைசி மூச்சு உள்ள வரை நடித்துக் கொண்டுதானிருப்பேன்.

முதலில், திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், தற்போது எனது எண்ணத்தை மாற்றிவிட்டேன். திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வீட்டிலாவது சினிமா வாசனை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன், ” என்கிறார் இந்த வெள்ளாவியில் வெளுத்த அழகி.


உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான விமல்!

சினிமா உலகைப்பொறுத்தவரை ஓரிரு படங்கள் வெற்றி பெற்று விட்டால் அப்படங்களின் ஹீரோக்கள் அதன்பிறகு கதை கேட்கிற தொனியே வேறுமாதிரியாக இருக்கும்.

அதாவது. முதலில், டைரக்டர் சொல்லும் கதையை கைகட்டி வாய்மூடி கேட்பவர்கள், பின்னர், ஒருமுறை கதையை கேட்டு விட்டு, ஒவ்வொரு காட்சியாக குற்றம் குறைகளை சொல்லி, அதை இந்த மாதிரி மாற்ற வேண்டும் என்று டைரக்டருக்கே கதை சொல்வார்கள்.

கேட்டால், என் ரசிகர்கள் நான் இப்படி நடித்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்று பதில் கொடுப்பார்கள்.
ஆனால் விமல் அப்படியல்ல, இதுவரை அவர் நடிப்பில், பசங்க, களவாணி,. வாகை சூடவா, மஞ்சப்பை உள்பட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஆனபோதும் இப்போதும் கதை விசயத்தில் டைரக்டர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லும் கதையை அந்த எதிர்கேள்வியும் இன்றி கேட்பார். பிடித்து விட்டால், உடனே ஓ.கே சொல்லி விடுவார்.

அதையடுத்து, தயாரிப்பாளர் யாரு, கேமராமேன் யாரு என்று சில கேள்விகளை மட்டுமே கேட்பார். அதற்கு டைரக்டர்தரப்பில் இருந்து என்ன சொன்னாலும், படத்தை கரைக்ட்டா முடிச்சிடுவாங்கள்ல அதுபோதும் என்று கேட்பார், அதில் தனக்கு திருப்திகரமான பதில் வந்தால் கால்சீட் கொடுத்து விடுவார்.

அதனால் இப்போது விமலுக்கு பிறகு



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies