அடி வாங்கி விட்டேன், வெற்றி நிச்சயம்!- காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.

12 Jul,2014
 

             


தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. கோவையை களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்ட ஹரி, இப்போது சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்.

விஷால், வில்லன் நடிகர் முகேஷ் திவாரி மோதும் காட்சிகள் கடந்த சில தினங்களாக காரைக்குடி மலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது.

அப்போது, ஒரு பாறையின் மேல் இருந்து முகேஷ் மீது விஷால் குதிப்பது போன்ற ஷாட் படமாக்கப்பட்டபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முகத்திலும், கையிலும் அடிபட்டு விட்டதாம்.

ஏற்கனவே சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதும் கையில் தகரம் கிழித்து காயம் ஏற்பட்டது. ஆக, பூஜை படத்தில் இது விஷாலுக்கு இரண்டாவது விபத்து ஆகும். இருப்பினும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் வாங்கும் அடி ஒவ்வொன்றும் எனது வெற்றிக்கான அறிகுறிதான என்கிறார்.

அதாவது, சண்டக்கோழி, மலைக்கோட்டை படங்களில் நான் நடித்தபோது இப்படித்தான் பலமுறை அடி வாங்கினேன். ஆனால் அப்படி ரத்தம் கொட்டி நான் நடித்த படங்கள் இரண்டுமே மெகா ஹிட்டாகி உள்ளன. அதனால் இந்த படத்தின் வெற்றி நான் வாங்கும் அடியில் இருந்தே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார் விஷால்


திருடன் போலீஸ் ஆடியோ விழாவில் ஆரண்ய காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.

 

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் எஸ்.பி.பி. சரண், ஆரண்ய காண்டம் படத்திற்கு பின்னர் தயாரிக்கும் அடுத்த படம் 'திருடன் போலீஸ்'. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதின் சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கிய இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

திருடன் போலீஸ் படத்தின் ஆடியோ விழாவுக்கு பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அவர் இந்த விழாவில் பேசும்போது, எஸ்.பி.சரணின் முதல் படம் ஆரண்ய காண்டம் குறித்து இதுவரை வெளிவராத ஒரு தகவலை இந்த மேடையில் கூறினார்.

  'ஆரண்ய காண்டம்' திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவதற்காக ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றுக்காக அந்த படம் திரையிடப்பட்டது. அதில் ஒருவராக எஸ்.பி.ஜனநாதன் இருந்ததாகவும், ஆனால் அவரை தவிர மற்ற நான்கு நீதிபதிகளும் இந்த படத்தை பார்க்க விரும்பாமல் வெளியேறிவிட்டதாகவும், தான் ஒருவர் மட்டுமே விருதுக்காக பரிந்துரை செய்ய முடியாது என்பதால் அந்த திரைப்படம் சிறந்த தேசிய விருது வாங்கும் வாய்ப்பை நழுவ விட்டதாகவும் கூறினார். ஆயினும் இந்த படத்தின் இயக்குனருக்கு சிறந்த அறிமுக இயக்குனர் விருது, மற்றும் சிறந்த எடிட்டர் விருது கிடைத்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார்.




Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies