அஜீத், சிறுத்தை சிவா மீண்டும் இணைகிறார்கள் செய்தித் துளிகள் துளிகள் துளிகள்

10 Jul,2014
 

             

அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத்.

தற்போது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட சிவா அதனை அஜீத்திடம் காட்டி ஒகே வாங்கியிருப்பது தான் லேட்டஸ்ட் தகவல். தற்போது கவுதம் மேனன் படத்தில் நடித்து வரும் அஜீத். அதை முடித்த உடன் மீண்டும் சிவாவுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. அஜீத், சிவா தவிர வேறெதுவும் முடிவாகவில்லை.

வீரம் படத்தின் இந்தி ஸ்கிரிப்டை முடித்துள்ள சிவா. அதில் அஜீத் கேரக்டரில் நடிக்க சல்மான்கானை அணுகி உள்ளார். அஜீத்தின் தமிழ் படத்தை முடித்துவிட்டு அதற்கு பிறகு வீரம் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று சிவா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



பணத்துக்காக படம் பண்ண மாட்டேன்ஸசெல்வராகவன் சொல்கிறார்ஸ.!


இரண்டாம் உலகம்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு செல்வராகவன் மீது வைத்திருந்த நம்பிக்கை ரசிகர்களுக்குக் கொஞ்சம் குறைந்தாலும் அடுத்து அவர் நல்ல படத்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.

2004ல் வெளிவந்த ’7ஜி ரெயின்போ காலனி’ படம்தான் அவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். அதன் பின் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் இயக்கிய “புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்” ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூலைக் குவிக்காமல் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

“காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி” ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவில் இவரும் ஒரு சிறந்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் செல்வராகவன்.

தற்போது, அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துவிட்டாராம். “பணத்துக்காகவும், ஏதோ ஒரு காரணத்துக்காவும் நான் படம் பண்ண மாட்டேன். ஒரு கதைக்கு நான் அடிமையாகணும். கடைசியாக ஒரு அருமையான கதை கிடைச்சிருக்கு, எழுத ஆரம்பிச்சிட்டேன்,” என செல்வராகவன் சொல்கிறார். விரைவில் இது பற்றிய விவரங்களை வெளியிடுவாராம்.

அநேகமாக இந்தப் படம் அவருடைய சொந்தத் தயாரிப்பாகவோ, அல்லது அவருடைய அப்பா கஸ்தூரிராஜா தயாரிப்பதாகவோ இருக்கலாம் எனத் தெரிகிறது. ‘இரண்டாம் உலகம்’ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் செல்வராகவனுக்கு ஏற்பட்ட பணப் பிரச்சனை இன்னும் முடிவடையாததால், மற்ற தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க தயங்கி வருகின்றனர்.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகும், இந்த உலகம் நம்மை நம்பிக்கிட்டிருக்குங்கற விஷயத்தை மனசுல வச்சி கதை பண்ணுனா நல்லா இருக்கும்.

ஹாலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஏஞ்சலினா ஜூலி. உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் கனவு கன்னி. இவர் பெற்ற குழந்தைகள் 3, தத்து குழந்தைகள் 3 என 6 குழந்தைகளின் தாய். இவர் நடித்த சால்ட் படம் ஆக்ஷன் ஹீரோக்களுக்கே சவால் விட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. இதனால் தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்டார். அதற்கு பிறகும் நம்பர் ஒன்னாகவே நீடித்தார். இந்த நிலையில் ஏஞ்சலினா கடும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 15 நிமிட வீடியோ காட்சி ஒன்று இணைய தளத்தில் வலம் வருகிறது. இதில் உடல் சோர்ந்து தேகம் மெலிந்து, கண்ணகளில் ரத்தம் வற்றி காணப்படுகிறார். சரும நோய் கண்டதுபோல அவர் உடல் முழுவதும் அடையாளம் தெரிகிறது.

அரை போதையில் யாருடனோ அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். வாளிப்பான அவரது முதுகு எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறது.

இந்த வீடியோவை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஒருவன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “ஏஞ்சலினா எனது வாடிக்கையாளர் பல ஆண்டுகாக அவருக்கு நான் ஹெராயின் மற்றும் கோகோவின் சப்ளை செய்து வருகிறேன். இந்த வீடியோ அவரது அனுமதியுடன் எடுத்தேன்” என்று அவன் தெரிவித்திருக்கிறான்.

“ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி இருந்தேன். நல்ல வேளையாக அதிலிருந்து மீண்டு விட்டேன்” என்று ஏஞ்சலினா முன்பு கூறியிருந்தார். அது போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது மீண்டும் போதை பழக்கதில் சிக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக அவர் விளக்கம் அளித்தால்தான் உண்மையான நிலவரம் தெரிய வரும். அவரை தொடர்பு கொள்ள ஹாலிவுட் மீடியாக்கள் முயற்சித்து வருகிறது.

திருடன் போலீசில் கிராபிக்ஸ் இல்லை: இயக்குனர் சொல்கிறார்

தமிழ் சினிமாவின் பிரபல கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக்ராஜு. ஜீன்ஸ், அந்நியன், தசாவதாரம் படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தவர். அவர் இப்போது திருடன் போலீஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அட்டகத்தி ஜோடி தினேஷ், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். கிராபிக்ஸ் நிபுணர் இயக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லையாம்.

இது பற்றி இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் தேவைப்படவில்லை. சின்ன சின்ன வேலைகள் இருக்கும் அது கண்ணுக்குத் தெரியவே தெரியாது. இது யதார்த்தமான ஒரு படம்.

பாடல் காட்சிகளில் ஸ்டூடியோவில் எடுத்துவிட்டு சுவிட்சர்லாந்தில் எடுத்ததாக காட்டலாம். ஆனால் அதில் ஜீவன் இருக்காது. அதனால் அந்த முயற்சியை எடுக்கவில்லை.

போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால் திருடன் போலீஸ் என்று டைட்டில் வைத்திருக்கிறேன். ஒரு போலீஸ் காலணியில் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனரும் வசிக்கிறார், ஏட்டும் வசிக்கிறார். ஏட்டுவின் மகன்தான் ஹீரோ.

அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகன் காலணிக்குள் செய்யும் ஒரு தவறை ஏட்டு கண்டுபிடிக்கிறார். நேர்மையான ஏட்டு தன் மகனை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சும் அந்த அதிகாரி ஏட்டை ரவுடிகளை வைத்து கொன்று விடுகிறார்.

அப்பாவின் வேலை மகனுக்கு கிடைக்கிறது. எதற்கும் உதவாத ஹீரோவுக்கு ஏட்டு வேலை கிடைத்ததும் பொறுப்பு வருகிறதா. தன் அப்பாவை கொன்றவர்களை அவர் பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் கதை. ரொம்ப ஜாலியான அதே நேரத்தில் உண்மையை சீரியசாக பேசுகிற படம் என்கிறார் கார்த்திக் ராஜு



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies