கோச்சடையான் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான். விஷால் பேச்சால் யூடிவி அதிர்ச்சி
15 Feb,2014
கோச்சடையான் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான். விஷால் பேச்சால் யூடிவி அதிர்ச்சி
பாண்டியநாடு பட வெற்றிக்கு பின்னர் யூடிவி நிறுவனத்துடன் இணைந்து விஷால் சொந்தமாக தயாரிக்கும் படம் \'நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் பாண்டியநாடு படத்தில் ஜோடியாக நடித்த லட்சுமி மேனனே மீண்டும் விஷாலுக்கு ஜோடி சேருகிறார். விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய \'திரு\' இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீஸர் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என யூடிவி தனஞ்செயன் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படம் யூடிவி வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ப்புத்தாண்டு அன்று \'நான் சிகப்பு மனிதன்\' படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் கோச்சடையான் சுமார் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வந்தபோதும் விஷால் தன் முடிவில் பின்வாங்கவில்லை. கோச்சடையான் தமிழ்ப்புத்தாண்டுக்கு வருவது சந்தேகம்தான். அப்படியே வந்தாலும் பரவாயில்லை, நமது படத்தை ரிலீஸ் செய்வோம் என்று நம்பிக்கையுடன் தனஞ்செயனிடம் கூறினாராம் விஷால். இதை கேட்ட தனஞ்செயன் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு ஒப்புக்கொண்டாராம்.
ஏற்கனவே சென்ற தீபாவளி தினத்தில் அஜீத்தின் ஆரம்பம், மற்றும் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜாவுடன் மோதி பாண்டிய நாடு என்ற வெற்றிப்படத்தை விஷால் கொடுத்து தன்னை நிரூபித்தவர் என்பதால் தனஞ்செயனும் விஷாலின் மேல் நம்பிக்கையுடன் உள்ளார்.