சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, பெப்ரவரி 03

03 Feb,2014
 

 டி டே படம் டப்பிங் சர்ச்சை: ஸ்ருதிஹாசனுக்கு கண்டனம்



கடந்த வருடம் இந்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டி டே. இதில் சுருதிஹாசன் பாலியல் தொழிலாளி கேரக்டரில் ஆபாசமாக நடித்து இருந்தார். படுக்கையறையில் அவர் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நிகில் அத்வானி இப்படத்தை இயக்கி இருந்தார். இது தற்போது தாவூத் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. 150 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு சுருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தனது அனுமதி பெறாமல் தமிழில் இந்த படத்தை டப்பிங் செய்துள்ளனர் என்றும், இது தயாரிப்பு நிறுவனம் தன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். டைரக்டர் நிகில் அத்வானியும் எதிர்த்து உள்ளார்.

இதற்கு டி டே படத்தின் தயாரிப்பு நிறுவனமான டர்மோஷன் பிக்சர்சின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, டி டே படம் டப்பிங்கை எதிர்ப்பது நியாயமற்றது. சுருதிஹாசன் இப்படத்தின் நடிகை. அவருக்கு வேறு எந்த சம்பந்தமும் படத்தில் இல்லை. நிகில் அத்வானியுடன் ஒப்பந்தம் போட்ட படியே நடந்துள்ளோம். குறிப்பிட்ட படங்களை வெளியிடக் கூடாது என்றும் போஸ்டர்களாக ஒட்டக் கூடாது என்றும் விநியோகஸ்தர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மதிப்பை கெடுக்க முயற்சி நடக்கிறது. அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.






 ஊசிமூலம் போதை மருந்து ஏற்றிய ஹாலிவுட் நடிகர் ஹாப் மேன் மரணம்



பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

இந்த நிலையில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை 11.30 மணியளவில் ஹாப் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தியதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் ஜிம் கேர்ரி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹாப் மேன் சினிமாவின் மிக உயரிய ஆஸ்கர் விருது பெற்றவர். கடந்த 2008–ம் ஆண்டு வெளியான ‘போர்ட்ரயல்’ என்ற படத்தில் இவரது நடிப்பை பாராட்டி சிறந்த





 சிம்பு–நயன்தாராவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு அழைப்பு



பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி வருகிறது. பழைய நட்பை இருவரும் புதுப்பிதுள்ளனர்.

சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடிப்பதால் ஹன்சிகா கோபமடைந்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன.

இந்த நிலையில் சிம்புவுடன் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஹன்சிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர் ஏற்பாரா? என்று தெரியவில்லை.

படத்தின் கதை பற்றி பாண்டிராஜ் கூறும்போது, சிம்பு ஒரு பெண்ணை காதலிப்பார். அது தோல்வியில் முடியும், அதன் பிறகு நயன்தாராவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணத்துக்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது என்பது கதை என்றார்.

இதில் சிம்புவின் காதலி கேரக்டரில் நடிக்க தான் ஹன்சிகாவை, அழைத்துள்ளார். இதில் நடிப்பதா வேண்டாமா? என்ற யோசனையில் ஹன்சிகா இருக்கிறார்.





கோலிவுட் மன்மதனுக்கு இன்று பிறந்த நாள்– ஹன்ஷிகா கொடுத்த ஷாக்


 

இன்றைய கோலிவுட்டில் பல மன்மதன்கள் இருந்தாலும் சில பேரை மன்மதன் சீட்டில் பட்டா போட்டு அமர்ந்து உள்ளனர். அந்த வரிசையில் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மன்மதன் தான் சிம்பு.

பல முன்னணி கதாநாயகிகளை தன் காதல் வலையில் விழ வைத்தவர். இன்று வரை கிசு கிசுக்கு பெயர் போனார் கூட சொல்லலாம் இவருடைய சமிபத்திய காதலியான ஹன்ஷிகா நேற்று இரவு 12 மணிக்கு தடாலடியாக சிம்புவின் விட்டில்  நுழைந்து அவருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவர் சிம்புக்காக ஏற்பாடு செய்து இருந்த பிரத்தியாக கேக்கை பரிசாக வழங்கி சிம்புவின் பிறந்த நாளை கொண்டாடினர்.

குறிப்பு : தற்போது இவர் நடித்து கொண்டு இருக்கும் பாண்டியராஜ் படத்தில் அவருடைய பழைய காதலியான நயன்தார கூட நடித்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நமக்கு தெரியாத ஒரு விஷயம், இன்று நயன்தாராவும் பாண்டியராஜ் செட்டில்  ஷாக் கொடுத்து இருக்கிறார் .

அகமொத்தில் ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்.

சினிஉலகம் சார்பாக சிம்புவிக்கு  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்





ஆறே நாட்களில் 12 பாடல்கள் –அசுரவேகத்தில் இசைஞானி



ஏற்கனவே நம் தளத்தில் மீண்டும் இசைஞானிடம் பாலா சரண் அடைந்தார் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

அதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளிவந்துள்ள இசைஞானி - பாலா இடம் பெற்றிருந்த பாடல் உருவான விதம் பற்றிய டீசெர இணையதளத்தில் கலக்கி கொண்டு இருக்கிறது.

இசைஞானி பொறுத்தவரை எல்லா வகையான பாடல்களையும் ஒரு கை பார்த்தவர் . தன் அடுத்த படத்தில் கராகட்டத்தை பின்னியில் கதை அமைக்க பட்டு உள்ளது என்பதால் பாலா இசைஞனிடம் சென்று இருக்கிறார். சமிபத்தில் உடல் நல குறைவால் பாதிக்க பட்ட இளையராஜா தன உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல்6 நாட்களில் 12  பாடல்களை தந்து உள்ளார்.

ராஜாவுக்கு இதேல்லாம் ஒரு கை வந்த கலை, அரை மணிநேரத்தில் 50 பாடல்களை கூட அவரால் உருவாக்க முடியும்.

இசையை என் சுவாசம் என்று வாழ்பவர் இசைஞானி.






 நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு இலவசமாக பாடல் எழுத தயார்: படவிழாவில் சினேகன் பேச்சு


முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘சிவப்பு’. இப்படத்தை சத்ய சிவா என்பவர் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தில், நவீன்சந்திரா கதாநாயகனாகவும், ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், தம்பி ராமையா, சோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கேயார், சிவா, நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், ராஜ்கிரண் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, ஜீவா சங்கர், ஜே.எஸ்.நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. டிரைலரின் இறுதியில் ராஜ்கிரண் பேசும் வசனமான இலங்கை தமிழர்களுக்கு எல்லோரும் இணைந்து ஆதரவு கொடுப்போம், இல்லையென்றால், விட்டுவிடுவோம். அதை விடுத்து அவர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்ற வசனம் அனைவரையும் சிந்திக்க வைத்தது.

இவ்விழாவில், முதலில் பேசிய சரத்குமார், இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். மிகவும் துணிச்சலோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்று நம்புகிறேன். இதற்கு டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனம் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் நடக்கக்கூடியது இதுதான். இதிலிருந்து இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை ஏற்படுகிறது என்று பேசினார்.

இப்படத்திற்கு சினேகன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சினேகன் பேசும்போது, நல்ல கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு பாடல் எழுத வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பாடல்கள் எதார்த்தனமான காட்சிகளை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லக்கூடிய படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இம்மாதிரியான படங்களை இயக்குனர்கள் எங்களிடம் கொண்டுவந்தால் இலவசமாகக்கூட பாடல்கள் எழுத தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.






 ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்காட்லாந்து இசைக் கல்லூரியின் கவுரவ டாக்டர் பட்டம்



ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.

இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்குவதாக ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அறிவித்தது.

தனது கே.எம். இசைப் பள்ளி மாணவர்களுடன் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்த கவுரவ பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் நன்றியுரை ஆற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், '1845-லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத்துறை கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனம் அளித்துள்ள இந்த கவுரவ பட்டம் தனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது' என குறிப்பிட்டார்.





 ‘வாலிப ராஜா’ படத்தில் மனநல மருத்துவராக கலக்கும் சந்தானம்



‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து கலக்க வரும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர்.

இப்படத்தில் சந்தானம் பலரின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு சொல்கிற மனநல மருத்துவராக வருகிறாராம். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவங்க பிரச்சினைகளோட ஒன்லைன் கேட்பாராம். அது பிடிச்சிருந்தா மட்டுந்தான் ட்ரீட்மெண்ட் கொடுப்பாராம். அப்படி ஒரு வித்தியாசமான மருத்துவராக வருகிறார்.

இந்த படத்தில் லோக்கல் காமெடியாக மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமான காமெடிகளையும் சந்தானம் பண்ணியிருக்கிறாராம். இந்த படத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கும் பஞ்சமிருக்காதாம். உதாரணத்துக்கு, ‘உன் காதலை போரடிக்காம பார்த்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’ ‘மாடு முன்னாடி போனா முட்டும்... ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயும் மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’ என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் விசில் வரவழைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரிக்கிறது.




 நயன்தாராவுடன் திரிஷா திடீர் சந்திப்பு



நயன்தாராவும், திரிஷாவும் தமிழ் திரையுலகில் மூத்த நடிகைகளாக உள்ளனர். திரிஷா 2002–ல் கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களுக்குமேல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். நயன்தாராவும் 2003–ம் ஆண்டில் இருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

புது நடிகைகள் வரத்து இவர்கள் மார்க்கெட்டை சரிக்கவில்லை. இன்னும் முன்னணி நடிகைகளாகவே உள்ளனர். போட்டி மனப்பான்மையின்றி இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது விருந்தும் நடந்தது. இதுகுறித்து டுவிட்டரில் திரிஷா கூறும்போது, நேற்றைய இரவு மகிழ்ச்சியாக கழிந்தது. தோழிகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் சந்தோஷம் மாதிரி வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.




மன நல மருத்துவராக சந்தானம்

Published on February 03, 2014 09:45am in Celebrities by Cine Ulagam
0
0
0

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பிறகு சந்தானம் தன்னுடைய தயாரிப்பில் களம் இறங்கும் படம் வாலிப ராஜா.
இப்படம் தெலுங்கு படம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கும் விசில் பறக்குமாம்,உதாரணத்துக்கு,‘உன் காதலை போரடிக்காம பார்த்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’ ‘மாடு முன்னாடி போனா முட்டும்... ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயும் மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’ என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கை தட்டல்களை வரவழைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/celebrities/20140203101423/#sthash.KmhyzgVQ.dpuf
மன நல மருத்துவராக சந்தானம்





Share this: