விஷாலை ‘லிப் லாக்’ முத்தத்தால் கிரங்கடித்த லட்சுமி மேனன்விஷாலுக்கு செமத்தியான ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்து அசத்தியுள்ளாராம் லட்சுமி மேனன்.திரு இயக்கத்தில் விஷால் லட்சுமி மேனன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் நான் சிகப்பு மனிதன்.இப்படத்திற்காக விஷாலுக்கு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் லட்சுமி மேனன்.இந்த முத்தக் காட்சி படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று இயக்குனர் பீல் பண்ணியதால் நடிக்க ஒத்துக் கொண்டாராம் லட்சுமி.இந்த முத்தக் காட்சியானது வழக்கம்போல கலை நயத்தோடு படம் பிடித்துள்ளார்களாம்.விஷாலுடன், லட்சுமி ஜோடி போடுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே அவர் பாண்டியநாடு படத்தில் கலக்கியிருந்தார். இப்போது 2வது முறையாக சூடான முத்தக் காட்சி புடை சூழ விஷாலுடன் ஜோடி கட்டியிருக்கிறார். இசைப்புயலின் அழைப்பிதழ்என்னுடைய கே. எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான்.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும்.எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.சண்டைக்கோழி கார்த்திகாபுறம்போக்கு படத்திற்காக சண்டைப்பயிற்சி எடுத்து வருகிறாராம் கார்த்திகா.இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு.சமூக நோக்கத்துடன் அவர் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா-விஜயசேதுபதி நடிக்கிறார்கள்.இப்படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்துக்கான நடிகர் தேடி வந்த ஜனநாதன், இப்போது தனது இயற்கை படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஷாமை அந்த வேடத்துக்கு செலக்ட் பண்ணியிருக்கிறார்.மேலும் இப்படத்தில் ஹீரோயினாக கார்த்திகா தெரிவாகியுள்ளார், அவர் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறாராம்.அதனால் அவருக்கு தற்போது தீவிர சண்டை பயிற்சி அளித்து வருகிறார்கள். மொத்தத்தில் கதைப்படி எந்த நடிகர்களுக்கும் ஜோடியாக இல்லாமல், கார்த்திகாவும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறாராம்.‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது.அந்த வரிசையில் குறுந்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்திருக்கும் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திங்கள் நடித்துள்ளனர்.மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.இப்படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. சிம்புவின் நியூ இயர் பாடல்!‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிம்பு.நடிகர் சிம்பு தன்னுடைய படங்கள் மட்டுமல்லாது, நட்புக்காகவும் பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் பாடி வருகிறார்,இந்நிலையில் லேட்டஸ்டாக மகாபலிபுரம் திரைப்படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார்.விநாயக் தயாரித்து நடிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியனின் உதவி இயக்குனரான டான் சான்டி இயக்குகிறார்.முகமூடி, யுத்தம் செய் புகழ் கே இசையமைப்பில், இப்பாடலை எழுதியிருப்பவர் யுகபாரதி.