விபத்தில் சிக்கிய நஸ்ரியா!
12 Nov,2013
படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார் நஸ்ரியா.
'காதலில் சொதப்புவது எப்படி' படப்புகழ் பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் படம் வாய் மூடி பேசவும்.
இப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடந்து வந்தது.
நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் பாலாஜி மோகன் படம்பிடித்து கொண்டிருந்தார்.
கதைப்படி நஸ்ரியா, டூவீலரில் வேகமாக வந்து திரும்புவது மாதிரியான காட்சியில் எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்தார்.
சறுக்கி விழுந்ததில் அவருக்கு சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் படக்குழுவினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உள்ளத்தை அள்ளித்தா ரீமேக்கில் கௌதம் கார்த்திக்
உள்ளத்தை அள்ளித்தா ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் கௌதம் கார்த்திக்.
தமிழ்சினிமாவின் எவர்கிரீன் கொமடிப்படம் தான் உள்ளத்தை அள்ளித்தா.
கார்த்திக், கவுண்டமணி, ரம்பா நடித்திருந்த இந்தப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து காட்சிக்கு காட்சி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்த இந்தப்படத்தை தற்போது ரீமேக் செய்யப்போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
படத்தில் ஹீரோவாக நடிப்பது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திகேதான். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
தந்தை நடித்த படத்தின் ரீமேக்கில் மகன் நடிப்பது தமிழ்சினிமாவில் இது இரண்டாவது முறை.
ஏற்கனவே தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக்கில் அவரது மகன் பிரசாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.