சினேகாவின் ஜொலி ஜொலிக்கும் கேம் ஷோ !!

05 Nov,2013
 


காதல் திருமணம் செய்துகொண்ட சிநேகாவும், பிரசன்னாவும் இப்போது தனிக் குடித்தனம் நடத்தி வருவது சினிமா வட்டாரமே தெறிந்த செய்திதான்!  ஆனால் தான் இதுவரை சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்துக்களையும், பணத்தையும், நகை நட்டுகள் எல்லாவற்றையும் பிறந்த வீட்டுக்கே விட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் என்ற தகவல் கொஞ்சம் சங்கடத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தத்தான் செய்தது. இப்போது தியாகராயநகரில் வாடகை பிளாட்டில் வசிக்கிறார்கள்.  
 
சிநேகா, பிரசன்னா இருவருக்குமே சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் கைவசம் இல்லை. அதனால் வருமானமும் கம்மி!  பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்த அழைப்புகளை வேண்டாம்... முடியாது... என்று இதுவரை மறுத்து வந்தார் சிநேகா! இப்போது வேறு வழி இல்லாமல் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.
 
 "சன் டிவி'யில் ஒளிபரப்பாக இருக்கும் மிகப்பெரிய ""கேம் ஷோ'' ஒன்றில் பிரதானமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிநேகா! பளபளக்கும் பட்டுப் புடவையிலும் ஜொலி ஜொலிக்கும் நகைகளிலும் மின்னலடிக்கிறார். இதற்காகவே சன் டிவி படப்பிடிப்பு அரங்கில் பிரம்மாண்டமான "செட்' போடப்பட்டு கடந்த 11-ந் தேதி முதல் சூட்டிங் சுடச்சுட நடந்து கொண்டு இருக்கிறது.  
 
சிநேகாவின் சிரிப்பழகையும், கொஞ்சிக் கொஞ்சி பேசும் தமிழையும், மிக விரைவில் சன் டிவியில் காணப் போகிறார்கள் ரசிக பெருமக்கள்! வெள்ளித்திரையில் இருந்து விடைபெற்று விட்ட சிநேகாவை காணவில்லையே? என்று காத்திருந்த கண்களுக்கு விருந்தாக அமையப் போகிறது இந்த சின்னத்திரை "கேம் ஷோ'!



அமிதாப் பச்சன் எனது கிளாஸ்மேட். பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர். சித்தார்த்தின் கடுப்பு பதில்





 1ரசிகரின் கேள்வியால் கோபம் அடைந்த சித்தார்த், பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர் என்றார்.
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தமிழில் ‘நூற்றெண்பது. ‘காதலில் சொதப்புவது எப்படி, ‘உதயம் என் எச் 4, ‘தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது ஜிகர்தண்டா, ‘காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சித்தார்த் தனது ரசிகர்களிடம் இணைய தளம் பக்கம் மூலம் கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்கிறார். தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். உங்களது அடுத்த தெலுங்கு படம் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டபோது,‘அடுத்து நான் நடித்துள்ள 5 படங்கள் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு இருமொழியில் நடித்த படமும், தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களும் அடங்கும் என்றார்.

பிரகாஷ்ராஜ் உங்களது கிளாஸ்மெட்டா என்றதற்கு அளித்த பதிலில்,‘பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர். அமிதாப்பச்சன்தான் என்னுடைய கிளாஸ்மெட் என பதில் சொல்லியிருக்கிறார் சித்தார்த். ஹீரோவாக நடித்து வருவதால் பிரகாஷ் ராஜின் வயதோடு ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டது சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால்தான் அவர் இப்படி பதில் சொன்னாராம்.



விஜய் படத்தில் மோகன்லாலுக்கு அவமதிப்பா?



 Jilla Movie First Look Stillsவிஜய் நடித்து வெளியாக உள்ள படம் ஜில்லா. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்த மோகன் லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட விளம்பரத்தில் விஜய் பெயர் முதலிலும் 2வதாக மோகன்லால் பெயரும் இடம்பெற்றுள்ளதே அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம்.
கோலிவுட்டில் விஜய் முன்னணி ஹீரோவாக இருக்கலாம். ஆனால் மோகன்லால் சீனியர் நடிகர். அதுவும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். நடிப்பிலும் ஜாம்பவான். அப்படிப்பட்டவரை எப்படி 2ம் இடத்துக்கு தள்ளலாம் என லால் ரசிகர்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக இணையதளத்திலும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்தார். அதில் கமல் பெயர் முதலில் போட்டு லால் பெயரை இரண்டாவதாக போட்டதில் நியாயம் இருந்தது. ஆனால் ஜில்லாவில் அப்படி போடலாமா? கேரளாவில் இப்படம் ரிலீசானாலும் இப்படித்தான் விளம்பம் செய்வார்களா? என மல்லுவுட் ரசிகர்கள் கேட்கின்றனர்.
ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதற்கு வேறுவிதமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்தான் ஹீரோ. கெளரவ வேடத்தில்தான் மோகன்லால் நடிக்கிறார். அவருக்குரிய முக்கியத்துவம் பட டைட்டிலிலும், மற்ற விஷயங்களிலும் கண்டிப்பாக கொடுக்கப்படும். தற்போது வெளியானது ஒரு சிறிய விளம்பரமே. இதை வைத்து மோகன்லாலை அவமானப்படுத்தியதாக அவரது ரசிகர்கள் நினைக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.



இசை மழையில் ‘இவன் வேற மாதிரி’



‘இவன் வேற மாதிரி’ படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இவன் வேற மாதிரி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

யுடிவி நிறுவனமும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கியிருக்கிறார்.

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார்.

எங்கேயும் எபோதும் படத்திற்கு இசை அமைத்த சத்யா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா வருகிற 6ம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.




Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies