சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, அக்டோபர் 21

21 Oct,2013
 

 எந்த நடிகைக்கும் நான் போட்டி இல்லை: காஜல் அகர்வால்








காஜல் அகர்வால் தமிழில் பிசியான நடிகையாக உள்ளார். கார்த்தி ஜோடியாக நடித்த 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படம் தீபாவளிக்கு வருகிறது. விஜயுடன் நடிக்கும் 'ஜில்லா' படம் பொங்கலுக்கு வருகிறது. நம்பர் ஒன் நடிகையாக முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

கார்த்தியுடன் ஏற்கனவே 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்தேன். தற்போது மீண்டும் அவருடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் ஜோடியாக சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நான் அடாவடி பெண்ணாக வருகிறேன். எனது கேரக்டர் பெயர் சித்ராதேவி பிரியா. 'ஜில்லா' படத்திலும் நல்ல வேடம். மதுரை வட்டார மொழி பேசி நடிக்கிறேன்.

ஏற்கனவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் சில பட வாய்ப்புகள் வந்தன. கால்ஷீட் இல்லாததால் அவற்றில் நடிக்க முடியவில்லை. மீண்டும் அதுபோன்ற கதைகள் வந்தால் சந்தோஷமாக நடிப்பேன்.

படப்பிடிப்பில் நான் கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பேன். மூலையில் சீரியஸ் முகத்தோடு உட்கார்ந்து இருப்பது பிடிக்காது. கமல் ஜோடியாக நடிக்கப்போவதாக வதந்திகள் பரவி உள்ளன. கமலுடன் நடிக்க யாரும் இதுவரை என்னை அணுகி பேசவில்லை.

நம்பர் ஒன் நடிகையாக விரும்பவில்லை. நிறைய படங்களில் நடிக்கிறேன். என் வேலையில் திருப்தி உள்ளது. எந்த சிக்கலும் இல்லை. இது எனக்கு நிறைவை தருகிறது. நம்பர்ஒன் நடிகையாக வேண்டும் என்ற என்னமெல்லாம் இல்லை.

இந்திப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. இங்கேயே நிறைய படங்கள் உள்ளன. எனவே இந்திக்கு போக அவசரப்படவில்லை.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.




புகையிலை எதிர்ப்பை கேலி செய்து சந்தானம் வசனம்: கார்த்தி படத்தில் சர்ச்சை காட்சி நீக்கம்




கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால் நடித்து தீபாவளிக்கு ரிலீசாக உள்ள ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் அரசின் புகையிலை, குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடித்து வசனம் வைத்து இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

காமெடி நடிகர் சந்தானம் இந்த வசனத்தை பேசி உள்ளார். புகையிலை மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது கேவலமான செயல் என்பது போல சந்தானத்தின் கிண்டல் வசனம் படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது என்றும் அக்காட்சியை நீக்க வேண்டும் என்றும் அரசின் சுகாதார துறை செயலாளருக்கு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் புகார் கடிதம் அனுப்பினார்.

தணிக்கை குழுவுக்கும் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தணிக்கை குழுவினர் ஆலோசனை நடத்தி சர்ச்சைக்குரிய வசன காட்சியை நீக்கும்படி உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து அக்காட்சி தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. தணிக்கை குழுவினர் கேட்டுக் கொண்டதால் சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கி விட்டதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




‘ஆல் இன் அழகு ராஜா’ படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.








‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரே கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ், தனக்கு புற்றுநோய் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எனக்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த நோய் எனக்கு மிகுந்த மன தைரியத்தையும், வலிமையையும் கொடுத்துள்ளது. நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். எனவே இந்த புற்று நோய் எனக்கு எந்த தீங்கையும் செய்யாது” என்றார்.

மேலும், “ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளாகிய உங்கள் ஆசீர்வாதத்தால், நான் நூறு வயதையும் கடந்து வாழ்வேன். நான் டாக்டரின் தீவிர கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் சிகிச்சை பெற்று வருவதால், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் என்னை சந்திக்கவோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ வேண்டாம்” என்றும் அப்போது நாகேஸ்வரராவ் கேட்டுக்கொண்டார்.

‘தர்மபத்தினி’ என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகுக்கு வந்த நாகேஸ்வர ராவ், சுமார் 71 ஆண்டுகளாக பல தலைமுறைகளை கடந்து நடித்து வருகிறார். ‘இட்டாரு மித்ருடு’ என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த இவர், ‘நவராரி’ என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். இது தமிழில் சிவாஜி கணேசன் நடித்த ‘நவராத்திரி’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

நாகேஸ்வரராவ் தனது மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘மனம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு மட்டுமின்றி ‘அன்னபூர்ணா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார்.

இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றுள்ள நாகேஸ்வர ராவ், தனது சிறந்த நடிப்புக்காக ‘பத்ம விபூஷண்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் தேசிய அளவில் திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் ‘ஏ.என்.ஆர். தேசிய விருது’ வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





ஹாட்ரிக் அடிக்க களமிறங்கும் தனுஷ்







ஆடுகளம் படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து வடசென்னை படத்தை இயக்குவதாக கூறினார் வெற்றிமாறன்.

ஆனால் சில காரணத்தினால் அப்படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக தனுஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை மீகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வழக்கு எண் மனிஷா யாதவ் நடிக்கவுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தை பற்றிய ஏனைய தகவல்கள் டிசம்பரில் அறிவிக்கப்படுமாம்.

ஏற்கெனவே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.




வீரத்துடன் மோதுமா பிரியாணி?






மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து இயக்கும் படம் பிரியாணி.

மங்காத்தா படப்பிடிப்பின்போது அஜித், படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியதால் என்னவோ வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு அதுவே பெயராகிவிட்டது.

பிரியாணி ரம்ஜானுக்கே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரம்ஜானுக்கு வர வேண்டிய பிரியாணி தீபாவளி வரும் வேளையிலும் வெளியாகவது போன்று தெரியவில்லை.

அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்குகிறது.

இந்நிலையில் பிரியாணி படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் அஜித்தின் நட்பால் பிரியாணியை வீரத்துடன் மோதவிட விரும்பவில்லையாம் வெங்கட்பிரபு.

ஆனால் படக்குழுவோ பிரியாணியை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளதாம்.





அழகுராஜாவில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்




கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.

இந்தப் படத்தில் சந்தானம் ஒரு காட்சியில், புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி உள்ளது.

இது ட்ரைலரில் இடம் பெற்றதால் கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது.

மேலும் குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்தக் காட்சியே புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் தான் என்று விளக்கமளித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ்.

ஆனால் எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அந்தக் காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ராஜேஷ் அறிவித்துள்ளார் .













Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies