சமந்தாவின் பலே திட்டம்

16 Oct,2013
 




சம்பளத்திற்கு பதில் லாபத்தில் பங்கு பெற முடிவு செய்துள்ளாராம் சமந்தா.

கொலிவுட், டொலிவுட் என பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சமந்தா திடீர் முடிவு ஒன்றினை எடுத்துள்ளாராம்,

அந்த முடிவு குறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகவும் பிடித்த ஸ்கிரிப்ட் சிறுபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டால் அந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.

உதாரணமாக பீட்சா மாதிரியான படத்தை கூறலாம். சம்பளம் வாங்காமல் நான் நடிக்கும் படம் வெற்றி பெற்று லாபம் கிடைக்கும் பட்சத்தில், அந்த லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை எனது சம்பளமாக பெற்றுக்கொள்வேன்.

தற்போது தெலுங்கில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். இந்த ஆண்டுடன் தெலுங்கில் நான் ஓப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு தமிழில் கவனம் செலுத்த உள்ளேன்.

மேலும் எனது திருமணம் பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. ரகசிய திருமணம் செய்துகொண்டேன், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறேன் என கற்பனையாக எழுதுகிறார்கள்.

நான் ஏன் ரகசிய திருமணம் செய்துகொள்ள வேண்டும். சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடக்கும் என்றும் திருமணம் முடிவானதும் அதுபற்றி நிச்சயம் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.



மீண்டும் கண்ணா லட்டு திண்ண ஆசையா





கண்ணா லட்டு திண்ண ஆசையா நட்சத்திர கூட்டணி மீண்டும் சேர்ந்து உருவாகி வரும் படம் வாலிப ராஜா.

இப்படத்தில் சேது, சந்தானம், விஷாகா மற்றும் பாலிவுட் நடிகை நுஷ்ரத் நடிக்கிறார்கள்.

மேலும் தேவதர்ஷினி, விடிவிகணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ரா லட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே பங்கு பெறுகிறது.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், சேது டிசைனராக வருகிறார். சந்தானம் மன நல மருத்துவர் மற்றும் விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவி.

வாலிப ராஜா என்பது சந்தானத்தின் பெயர்தான். சைக்காட்டிஸ்ட் பாத்திரத்தின் பெயர் அது.

சந்தானம் இத்துறையில் சென்னையில் பிரபலமானவர், அவர் படத்தின் கதை பயணத்தில் முக்கிய பயணியாக இருப்பதால் அந்த பாத்திரப் பெயரே படப் பெயராகி இருக்கிறது.

மேலும் வாலிப ராஜா என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம் என்று குறிப்பிடும் கோகுல், இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம் அதாவது பேமிலி என்டர்டெயினர் என்கிறார் அழுத்தமாக.


நோ பஞ்ச் டயலாக்: விஜய்




பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்கிறாராம் இளைய தளபதி விஜய்.

தற்போது வருகிற தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் அறிமுகம் என்றாலே பஞ்ச் டயலாக்கும் சேர்ந்துதான் வருகிறது.

முன்னணி ஹீரோக்கள் மட்டுமின்றி, வளரும் மற்றும் வளராத ஹீரோக்கள் கூட பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்துள்ளனர்.

தற்போது அந்த பஞ்ச் டயலாக்கே வேண்டாம் என்கிறாராம் விஜய்.

கடைசியாக அவர் நடித்த தலைவா படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இல்லை. அடுத்து அவர் நடித்து வெளியாக உள்ள ஜில்லா படத்திலும் அதுபோன்ற எந்த டயலாகும் கிடையாதாம்.

அதேபோல் இனி தனது படங்களில் ஹீரோயிச ஓவர் பில்டப் காட்சிகளுக்கும் தடை போட்டிருக்கிறாராம் விஜய்.


பேருந்து நிலையத்தில் விமலின் இசை வெளியீடு




விமலின் ஜன்னல் ஓரம் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா நாளை சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறவுள்ளது.
கரு.பழனியப்பன் பார்த்திபன், விமல் நடிப்பில் ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் மலையாளத்தில் வெளியான ஆர்டினரி என்ற படத்தின் ரீமேக்தான்.

இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார் மேலும் விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஓடியோ வெளியீடு வருகிற 17ம் திகதி பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

இப்படத்தில் நடித்திருக்கும் விதார்த், ரமணா, பூர்ணா, மனிஷா, சிங்கம் புலி, ராஜேஷ் ஆகியோர் ஒரு சிறப்புப் பேருந்தில் சென்னையை வலம் வந்து இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களுடன் படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பன், இசை அமைப்பாளர் வித்யா சாகர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும் சுமந்து செல்லும் பேருந்து, காலை 8 மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் இசை கொண்டாட்டத்துடன் ஜன்னல் ஓர பயணத்தை துவங்குகிறது.

தொடர்ந்து கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் படப் பாடல்கள் வெளியிடப்படும்.

இறுதியாக மாலை 6 மணிக்கு வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெறும் விழாவில் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா படத்தின் டிரெய்லரையும், பாடல் காட்சிகளையும் வெளியிட இருக்கிறார்.


உதயநிதியை நிராகரித்த சிவகார்த்திகேயன்




கால்ஷீட் கொடுக்கமாட்டேன் என்று உதயநிதிக்கு நோ சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

மெரினா படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வரிசையாக நடித்தார்.

'3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார்.

அந்தப் படத்துக்காக குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்ததற்காக கோடி ரூபாய் சம்பளத்தைத் தொட்டாராம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்காக ரெண்டு கோடி சம்பளம் வாங்கினாராம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சிவகார்த்திகேயன் 4 கோடி கேட்க உதயநிதி அவ்வளவு தர முடியாது என மறுக்க பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனதாம்.

இறுதியில் இரண்டை கோடிக்கு உதயநிதி ஓ.கே. சொல்ல சிவாகார்த்திகேயனோ நோ சொல்லிவிட்டாராம்.

ரசிகர்களை குஷிப்படுத்தும் காஜல்




ரசிகர்களை குஷிப்படுத்தும் கதைகளை தெரிவு செய்து நடிக்கப்போகிறாராம் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலை தெலுங்கு திரையுலகம் கழற்றி விட்டதால் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடித்துள்ள அவர் மேலும் சில படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம்.

அவர் கேட்ட கதைகள் எல்லாமே ஜனரஞ்சகமான கதைகளாம். மேலும் இந்த மாதிரியான கதைகள் தான் வேண்டும் என்று கேட்டுவாங்குகிறாராம்.

காரணம் கேட்டால், சினிமா ஒரு பொழுது போக்கு மீடியா. அதனால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் இரண்டு மணி நேரம் ஜாலியாக, ரிலாக்ஸ் செய்ய தான் வருகின்றனர்.

அப்படி வருபவர்களை முழு திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே ஜாலியான காதல் கலந்த கொமடி படங்களாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் காஜல்.



Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies