ஆவேசத்தில் அமலாபால்

15 Oct,2013
 





தன்னைப் பற்றி வதந்திகள் பரவுவதால் ஆவேசத்தில் இருக்கிறாராம் அமலா பால்.

அமலாபால் தற்போது ஜெயம்ரவி ஜோடியாக 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு மலையாள படமும், ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளன.

இந்நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி விட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்த செய்திகள் அவரின் காதுகளுக்கு எட்டவே கோபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி வருகின்றன. இந்திப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் வதந்தி பரவி உள்ளது.

மேலும் இந்திப் படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. அப்படி இருக்க நான் நீக்கப்பட்டேன் என்று எழுதுகிறார்கள்.

இது மனத்துக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கோபமாக கூறியுள்ளார் அமலாபால்.


மலையாள இயக்குனரின் முதல் தமிழ்ப் படம்






மலையாள உலகின் வெற்றி இயக்குனர் அனில்குமார் முதன்முறையாக தமிழில் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்திய- நியூசிலாந்து பிசினஸ் கவுன்சில் உறுப்பினரும், கெமிக்கல் இன்ஜினியரும் இந்தியருமான சசி நம்பீசன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

இவர் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் ஐஸ்வர்யா எண்டர்டெயின்மென்ட் சார்பில் புதிய தமிழ் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படம் முழுவதும் நியூசிலாந்திலேயே படமாக்கப்படவுள்ளது.

இதில் வினய் ஹீரோவாகவும், மதுரிமா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இளைஞர்களை கவரும் விதமாக காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகுகிறது.

இதன் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கி ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜெயராம் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மாந்த்ரீகன், சனாகான் நடிப்பில் வெளியான கிளைமாக்ஸ் போன்ற வெற்றிப்படங்கள் உட்பட 18 சூப்பர் படங்களை இயக்கியவர் அனில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆரம்பம் சென்டிமெண்ட்!





ஆரம்பம் படத்தினை வெளியிடுவதற்கு  சென்டிமெண்ட் ஒன்றை வைத்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.

ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை தீபாவளி தினமான நவம்பர் 2ம் திகதி வெளியிட தீர்மானித்திருந்தார்கள்.

அதன்பிறகு பட வெளியீட்டு திகதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 31ம் திகதிக்கு மாற்றிவைத்து விட்டார்கள்.

தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அடித்துப்பிடித்து சண்டையிடக் கூடாது என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்கள் என்று நினைத்தால் இங்கு கதையே வேறு.

இதற்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட்டே ஒளிந்திருக்கிறதாம்.

இதற்குமுன் ஆரம்பம் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டது, படத்திற்கு பூஜை போடப்பட்டது, படத்தின் டைட்டிலை அறிவித்தது, முதல் டீஸரை வெளியிட்டது, அடுத்து ஓடியோ வெளியீடு, ட்ரெய்லர் என எல்லாமே வெளியிடப்பட்டது வியாழக்கிழமை அன்றுதான்.

அதனால் செண்டிமெண்ட்டாக படத்தையும் வியாழக்கிழமை வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்களாம்.



முட்டை குளியலில் தீபிகா





நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வந்த தீபிகாவிற்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ராம் லீலா.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து சர்சை கிளம்பியுள்ளது.

தங்கள் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, ராபரி சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் மற்றும் அவரது படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது ராம் லீலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடைபெறும் இடத்தை நெருங்கிய போராட்டக் குழுவினர் தீபிகா மீதும், படக்குழுவினர் மீதும் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீச தயாராக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசி ஒரு வழியாக முட்டை வீச்சு சம்பவத்தை தடுத்தி நிறுத்தினர் படக்குழுவினர்.

முட்டை வீச்சு சம்பவம் நடப்பதை முன்கூட்டியே தடுத்ததால், எந்த டென்ஷனும் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தீபிகா.



விஷ்ணுவின் விஸ்வரூபம்!






அடுத்தடுத்து 5 பெரிய படங்களில் கமிட்டாகியுள்ளதால் குஷியில் இருக்கிறாராம் விஷ்ணு.

வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான விஷ்ணு குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார்.

இந்நிலையில் தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றிக் கொண்டுள்ளார்.

தற்போது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் முண்டாசுப் பட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராம் இயக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார்.

மேலும் 4 படங்களில் நடிப்பதற்கு வேறு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் கலக்குற மாப்புள்ள என்ற படத்தில் நடிக்கவிருக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் பிந்து மாதவி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

விஷ்ணுவை அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கும் வீரதீர சூரன் என்ற படத்திலும்  நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சுசீந்திரன் தற்போது விஷால் நடிக்கும் பாண்டிய நாடு படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு விஷ்ணுவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் ஏன்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கும் இப்படத்தில் இவருடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

மேலும் நகுல் நடிப்பில் வெளியான நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தை தயாரித்த சந்திரன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

மொத்தத்தில் வளர்ந்து வரும் விஷ்ணு பிரபல இயக்குனர்கள் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

புது இமேஜில் ஜெயம் ரவி





தமிழ் சினிமாவில் ‘விளையாட்டு வீரர்’ என்ற பெயரினை எடுத்துள்ளாராம் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். அதில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.

தாஸ் படத்தில் கால் பந்தாட்ட வீரராக, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் குத்துச் சண்டை வீரராக, பேராண்மை படத்தில் என் சி.சி.பயிற்சியாளராக  நடித்தவர் தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகம் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார்.

இதனால் ஜெயம் ரவிக்கு விளையாட்டு வீரருக்கான ஒரு இமேஜ் உருவாகி இருக்கிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம்.அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் கற்று தந்தது என்றால் அது மிகையாகாது.

நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில் தான் நான் வெற்றி தோல்விகளை எதிர் கொள்கிறேன்.

மேலும் எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரன் பாத்திரம் அமைவது திட்டமிட பட்டது அல்ல, நான் சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராகவே உள்ளேன்.

தற்போது நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் நிமிர்ந்து நில் மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் பூலோகம் ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே என்று நம்பிக்கை ஒளிர கூறுகிறார் ஜெயம் ரவி.





Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies