துயர் பகிர்வோம்

பெயர் : திரு சுந்தரலிங்கம் பிறேமச்சந்திரன்

பிறந்த நாள் : 12 APR 1966

இறந்த நாள் : 29 APR 2019

பிறந்த இடம் : மீசாலை

இறந்த இடம் : டென்மார்க் Mississauga - Canada

தொடர்புக்கு : .

 

12 APR 1966
இறப்பு
29 APR 2019
திரு சுந்தரலிங்கம் பிறேமச்சந்திரன்
வயது 53
மீசாலை வடக்கு(பிறந்த இடம்) டென்மார்க் Mississauga - Canada
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்களும்,மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும்,மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள்,பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த மீசாலை வடக்கில் 12/APR/1966 இல் மலேரியா தடை மேற்பார்வையாளராக கடமை புரிந்த சுந்தரலிங்கம் மீனாட்சிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பிறேமச்சந்திரன் அவர்கள் பிறேமா, பிறேமளா ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் றெஜிமென்ரல் சார்ஜன் மேஜராக விளங்கிய பாலசுந்தரம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகள் மாதினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அம்சவி, அக்‌ஷவி எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
மேலும் டென்மார்க்கில் பல காலம் வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், .இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.04.2019 இல் 53 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies